Sunday, November 12, 2017

விவேக் பெயரில் உள்ள சொத்துகள் என்னென்ன? அதிகாரிகள் பட்டியலிட்டு ஆய்வு



விவேக் பெயரில் உள்ள சொத்துகள் என்னென்ன? என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் பட்டியலிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

நவம்பர் 12, 2017, 04:30 AM
சென்னை,

ஜெயா டி.வி.யின் தலைமை நிர்வாக அதிகாரியும், சசிகலாவின் அண்ணன் மகனுமான விவேக் வீடு சென்னை கோடம்பாக்கம், ராமநாதன் தெருவில் உள்ளது. விவேக் வீட்டில் நேற்று 3-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது, ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் நகைகள் தனி அறையில் பூட்டி வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் 2 பேர் அங்கேயே தங்கினர். நேற்று காலையில் மீண்டும் வழக்கம் போல் சோதனை நடைபெற்றது. அப்போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ‘ஜாஸ் சினிமாஸ்’ திரையரங்கம் வாங்கியதற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது? பல்வேறு நிறுவனங்கள் பெயரில் நடைபெற்ற வங்கி மற்றும் பண பரிவர்த்தனைகள், அதற்கான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு உயர் அதிகாரி நேரடியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்.

மேலும் அவருடைய பெயரில் உள்ள சொத்துகள் என்னென்ன? என்பதை பட்டியலிட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விவேக்கின் நேர்முக உதவியாளரான ராஜூவை, விவேக் இல்லத்தில் இருந்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் அவருடைய காரில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு தலைமை அலுவலகம், சென்னை போயஸ் கார்டனில் செயல்பட்டு வந்த ஜெயா டி.வி.யின் பழைய அலுவலகம், அடையாறு கற்பகம் சாலையில் உள்ள டி.டி.வி.தினகரனின் அலுவலகத்துக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது ஏற்கனவே விவேக்கிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் ஒன்றாக இருக்கிறதா? அல்லது முன்னுக்கு பின் முரணாக இருக்கிறதா? என்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை சுமார் 2½ மணி நேரம் வரை நீடித்தது. அதற்கு பின்னர், வருமான வரித்துறை உயர் அதிகாரி அவருடைய காரிலேயே ராஜூவையும் அழைத்துக்கொண்டு மீண்டும் விவேக் வீட்டிற்கு வந்தார்.

விவேக் வீட்டில் இருந்து, தங்கம், வைர நகைகளும், வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அது குறித்தும் விவேக்கிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே சென்னை அண்ணாநகரில் உள்ள, கீர்த்தனாவின் தந்தை பாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவிலேயே முடிவடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள், நகைகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...