Sunday, November 12, 2017

அரசியல்வாதின்னா  கோவணத்தோட அலையணுமா

சென்னை, ''நான், காந்தியின் பேரன் அல்ல. ஆனால், எங்களை குற்றம் சொல்பவர்கள், காந்தியின் பேரன், பேத்திகளா?'' என,தினகரன் கேள்வி எழுப்பினார்.



சென்னையில், அவர் அளித்த பேட்டி:

வருமான வரி சோதனையை, நாங்கள் எதிர்க்க வில்லை; வரவேற்கிறோம். புதுச்சேரியில், என் பண்ணை வீட்டில், பாதாள அறை உள்ளதாக செய்தி வெளியானது;அப்படி எதுவும் கிடை யாது. என் வீட்டிற்கு வந்த, வருமான வரி துறை அதிகாரிகள், அவர்களுடைய கடமையை செய்தனர்; தவறான தகவல் எதையும் பரப்ப வில்லை. ஆனால், 184 இடங்களில் சோதனை
என்பதை தான், உள்நோக்கம் உடையது என, கூறுகிறேன். எதையோ எதிர்பார்த்து வந்துள்ளனர்.

நான், காந்தியின் பேரன் போல் பேசவில்லை; சாதாரண மனிதன் தான்.ஆனால், எங்களை குற்றம் சொல்பவர்கள், காந்தியின் பேரன், பேத்திகளா? என்பதையும் பார்க்க வேண்டும். நாங்கள் பெரிய கட்சி என, எங்கும் கூறவில்லை.ஜெ., மறைவுக்கு பின், சசிகலா தலைமையில் இயங்கும் சிறிய குழு. எங்களை அழித்துவிட்டு, யாரும் வளர நினைத்தால் முடியாது.கடந்த,1996ல்,எங்கள் வீடுகளில்சோதனை நடந்தது; 20 ஆண்டுகளுக்கு பின்,தற்போது சோதனை நடந்துள்ளது. சட்டத்தை மதிப்பவர்கள், நாங்கள்.சோதனை முடிந்த பின், உண்மை தெரிய வரும்.

வருமான வரித்துறைஅதிகாரிகள், 350 கார்களை வாடகைக்கு, 'பாஸ்ட் டிராக்' நிறுவனத்தில் எடுத்து உள்ளனர்.வேறு நிறுவனம்இல்லையா; சேகர் ரெட்டி நண்பராக இருந்தவர்கள்;அவரை பெரிய ஒப்பந்த தாரராக உருவாக்கியவர்கள்;அவரது டைரியில் பெயர்இருந்ததாக கூறப்படுவோர், வீடுகளில் சோதனைக்கு செல்லவில்லை.

அமைச்சர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு, எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் தான் உள் நோக்கம் உள்ளது என, கூறுகிறேன்.. 'தினகரன்,'பென்ஷன்' தொகையில்வசிக்கிறார். அவருக்கு, இவ்வளவு பெரிய வீடு எப்படி?' என, சிலர் கேட்கின்றனர். அரசியல்வாதி என்றால், கோவணத்துடன் தான் அலைய வேண்டும் என, ஆசைப்படுகின்றனரா;

நான், 1989ல் இருந்து தொழில் செய்கிறேன். அரசியலுக்கு வந்த பின், என் கம்பெனிகளை, என் மனைவி கவனிக்கிறார்.பழனிசாமி, பன்னீர் செல்வம் தூண்டுதலில், சோதனை நடந்து உள்ளது. எங்கள் குடும்பம் மட்டும்தான், உங்களுக்கு குறிக்கோளா; ஓராண்டாக, இப்படி செய்கிறீர்களே ஏன்?இவ்வாறு தினகரன் கூறினார்.

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...