Thursday, November 23, 2017

மகாராஷ்டிராவிற்கு பதிலாக ம.பி., சென்ற ரயில் : விவசாயிகள் அதிர்ச்சி 

ரயில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், விவசாயிகள்
Updated : நவ 23, 2017 03:33

புதுடில்லி: டில்லியில் இருந்து, விவசாயிகளுடன் புறப்பட்ட சிறப்பு ரயில், தவறான சிக்னலால், மஹாராஷ்டிர மாநிலத்துக்கு பதிலாக, மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்றது.

விவசாயிகள்:

சமீபத்தில், டில்லியில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் நடத்திய போராட்டத்தில், மஹாராஷ்டிர மாநிலம், கோல்ஹாபூரைச் சேர்ந்த, 500 பெண்கள் உட்பட, 2,500 விவசாயிகள் பங்கேற்றனர். போராட்டத்திற்கு பின், சொந்த ஊர் திரும்ப, 39 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, சிறப்பு ரயிலை முன்பதிவு செய்திருந்தனர்.

ஊழியர்கள் கவனக்குறைவு:

கடந்த, 20ம் தேதி இரவு, டில்லியில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், மதுராவில் இருந்து கோட்டா, மும்பை, புனே வழியாக கோல்ஹாபூர் செல்ல வேண்டும். ஆனால், தவறான சிக்னல் கிடைத்ததால், மதுராவில் இருந்து ஆக்ரா, குவாலியர் வழியாக, தவறான வழியில், ம.பி., மாநிலம், முரைனா மாவட்டம், பான்மோர் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. செல்ல வேண்டிய இடத்திற்கு பதில் வேறு மாநிலத்துக்கு வந்ததால், ஆத்திரமடைந்த விவசாயிகள், ரயில் டிரைவரிடம் கேட்டதற்கு, மதுராவில் சிக்னல் கிடைத்த வழியில் வந்ததாகக் கூறினார். இதையடுத்து, ஸ்டேஷன் மாஸ்டரிடம் விவசாயிகள் புகார் கூறியதையடுத்து, அந்த ரயில், கோல்ஹாபூர் புறப்பட்டுச் சென்றது.

இது குறித்து, அந்த ரயிலில் பயணம் செய்த விவசாயிகள் கூறுகையில், 'ரயில்வே ஊழியர்களின் கவனக்குறைவால், தவறான பாதையில் ரயில் வந்தாலும், எதிரில் வேறு ரயில் வராததால், எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை' என்றனர்.

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...