Thursday, November 23, 2017

விமான நிலையத்தில் மத்திய அமைச்சரை வறுத்தெடுத்த பெண் டாக்டர்

Updated : நவ 23, 2017 05:19 | Added : நவ 22, 2017 20:04 



  இம்பால்: மத்திய அமைச்சருக்காக விமானம் தாமதம் ஆனதை தொடர்ந்து பெண் டாக்டர் ஒருவர் மத்திய அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள விமானநிலையத்தில் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கன்னதானம் சென்ற அதே விமானத்தில் பெண் டாக்டர் நிராலா என்பவர் நோயாளியை காண்பதற்காக பயணம் செய்ய காத்திருந்தார். மத்திய அமைச்சருக்காக விமானம் புறப்படுவது தாமதம் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் டாக்டர் மத்திய அமைச்சர் விமான நிலையத்திற்கு வந்த உடன் அவருடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மத்திய அமைச்சர் டாக்டரை சமாதானப்படுத்த முயன்றார். இதனை ஏற்க மறுத்த பெண் டாக்டர் இனிமேலும் விமானம் தாமதப்படுத்தப்படமாட்டாது என எழுதி தரும் படி கோரினார்.இது தொடர்பான வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது., விஐ.பி., கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என டாக்டர் நிராலா கூறினார்.

உண்மை காரணம் வேறுஆனால் விமானம் தாமதத்திற்கு காரணம் ஜனாதிபதி வருகைக்காக குறிப்பட்ட நேரத்திற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் விமானங்கள் பறக்க தடை இருந்ததால் விமானம் தாமதாக புறப்பபட்டதாக பின்னர் தெரியவந்தது.

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...