Saturday, November 11, 2017

இனி, 'ஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங்!'  கணினி முன் அமர்ந்து கல்லூரி தேர்வு செய்யலாம்


அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன் சிலிங், அடுத்த ஆண்டு முதல், 'ஆன் லைனில்' நடத்தப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால், வெளியூர் மாணவர்கள், சென்னைக்கு வர வேண்டிய அலைச்சல் இல்லை.





உத்தரவு

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, கவுன்சிலிங் வாயிலாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கவுன்சிலிங்கை, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை நடத்துகிறது.இந்நிலையில், 2016ல் நடந்த கவுன்சிலிங்கில், மாணவர்

சேர்க்கை செயலராக இருந்த,பேராசிரியை இந்துமதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகம் செய்தார்.

இரண்டு ஆண்டுகளாக, ஆன்லைன் விண்ணப்ப முறை பின்பற்றப்படுகிறது. அதை தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டில், ஆன்லைனிலேயே கவுன்சிலிங் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டு
உள்ளது.இதற்காக, இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலராக, அண்ணா பல்கலை பேராசிரியர், ரைமண்ட் உத்தரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிமுகம்

ஏற்கனவே, 2015 வரை, இவர், இப்பொறுப்பில் இருந்துள்ளார். அவரது மேற்பார்வையில், வரும் கல்வி ஆண்டில், 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்துவதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.
இதற்காக, பல்வேறு மாவட்டங்களில் உள்ள, அண்ணா பல்கலையின் மண்டல அலுவலகங் களில், ஆன்லைன் கவுன்சிலிங் உதவிமையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மாணவர்கள், தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே, ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.விண்ணப் பங்கள் ஏற்புக்கு பின், தங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, விருப்ப இடங்களை பதிவு செய்யும் முறை


அறிமுகம்செய்யப்படும். பின், அவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசைக்கு ஏற்ப, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

வழிகாட்டல்:

எனவே, வரும் கல்வி ஆண்டில் மாணவர் களும், பெற்றோரும், சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்திற்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை. எங்கேயும் அலையாமல், கணினி முன் இருந்து, கல்லுாரியை தேர்வு செய்யலாம். 'இதற்கான வழிகாட்டல் மற்றும் அறிவிப்புகள், பிப்ரவரி யில் அறிவிக்கப்படும்' என, உயர் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...