Tuesday, November 21, 2017

பேங்க்காக் பறக்கலாம் வாங்க..! - ஏர் ஏசியா அழைக்கிறது

பதிவு செய்த நாள்

20 நவ
2017
12:44
'சின்ன சின்ன ஆசை.
சிறகடிக்கும் ஆசை.
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை.'

பூமி முழுக்க சுற்றி வராட்டாலும், ஒரு தடவையாவது இந்த இடத்துக்கு போயிட்டு வரணும்னு எல்லாருக்குமே ஒரு விஷ் லிஸ்ட் இருக்கும். அது துள்ளிக் குதிக்கும் நயாகராவா இருக்கலாம். மிதந்து செல்லும் வெனிஸ் நகரமா இருக்கலாம். குடும்பத்தோடு சென்று குதூகலமாக இருக்க வைக்கும் தாய்லாந்தாக இருக்கலாம். அப்படி நமக்கு மிகவும் பிடித்த இடங்கள் பட்டியலில் வர வேண்டும் என்றால் அங்கே நிச்சயம் 'சம்திங் ஸ்பெஷல்' இருக்க வேண்டும்.

தாய்லாந்து என்றவுடன் உங்களுக்கு பல விஷயங்கள் நினைவுக்கு வரலாம். பீச்சுகள், பார்ட்டிகள், உல்லாச தலங்கள் என்று பல விஷயங்கள் இருந்தாலும், இவை எல்லாம் தவிர அங்கே எழில் கொஞ்சும் பேங்க்காக் இருக்கிறது. பாரம்பரியம் மற்றும் நவீனத்தின் கலவையாய் தோற்றமளிக்கும் இந்த தாய்லாந்தின் தலைநகரத்தைக் காண உலகில் பல்வேறு மூலைகளில் இருந்தும் ஒவ்வொரு வருடமும் வந்து செல்கின்றனர். உல்லாசம், சவால்கள் மற்றும் அழகு ஆகியவை ஒரே நகரத்தில் அமைந்திருக்கும் புதிரான நகரங்களில் பேங்க்காக்கும் ஒன்று.

தாய்லாந்தின் பாரம்பரியத்தின் தாயகம், பேங்க்காக், இங்கு வானளாவிய கட்டடங்களும், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களும், உயர்தர, சொகுசு உணவகங்களும் இருக்கின்றன, சுவையான பிளாட்பார்ம் கடைகளும் உள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல்களும் இருக்கின்றன, எளியவர்களுக்கான தங்குமிடங்களும் ஏராளம் இருக்கின்றன. உல்லாச விடுதிகளும் இருக்கின்றன, புத்தரின் கோவிலும் இருக்கிறது.

குறிப்பாக, 3டி அருங்காட்சியகம் பார்க்க 'ஆர்ட் இன் பாரடைஸ்', ஷாப்பிங் பிரியர்களுக்கு 'சட்டுச சந்தை', செல்ல குட்டீஸ்கள் குதூகலிக்க 'சியாம் பார்க் சிட்டி', இயற்கை அழகை காண 'டாம்னியான் சதுவாக் மிதக்கும் சந்தை', பிரமாண்ட மாளிகையை காண 'தி கிராண்ட் பேலஸ்' ஆகிய இந்த ஐந்து இடங்கள் பேங்க்காக்கில் நிச்சயம் நீங்கள் பார்த்து ரசிக்கவேண்டியவை.

மொத்தத்தில், பேங்க்காக்கை சுற்றி வந்தால், பல்வேறு உலகங்களை பார்த்த உணர்வு கிடைத்திடும். இதைக் கேட்கும்போதே உங்களுக்கும் இந்நகரைச் சுற்றி வர ஆசை பிறக்கிறது அல்லவா? இதோ உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற ஏர் ஏசியா திருச்சி டூ பேங்க்காக் விமான சேவையைத் துவங்கியுள்ளது.

https://www.youtube.com/watch?v=hn5i08RTusA

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...