Thursday, July 5, 2018

கண்டக்டர் இல்லாமல், 231 பஸ்கள்  இன்று முதல் இயக்கம்

dinamalar 05.07.2018
நஷ்டம் மற்றும் கண்டக்டர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி, தமிழகம் முழுவதும், 231 பஸ்களை, கண்டக்டர்கள் இல்லாமல் இயக்க, போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.



தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின், ஏழு கோட்டங்கள், 21 மண்டலங்கள் மூலம், 22 ஆயிரத்து, 457 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் இயக்கம், பராமரிப்பு பணிகளில், 1.43 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.

குறைக்க முயற்சி :

போக்குவரத்து கழகங்களின் நஷ்டத்தை காரணம் காட்டி, சில மாதங்களுக்கு முன், நெல்லை கோட்டம், மதுரையுடன் இணைக்கப்பட்டது. தற்போதுள்ள, ஏழு கோட்டங்களை, நான்காக குறைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

தற்போதுள்ள, 20 ஆயிரத்து, 120 வழித்தடங்களில் பஸ்களை இயக்க, குறைந்தபட்சம், 95 ஆயிரம் டிரைவர், கண்டக்டர்கள் தேவை. தற்போது, 72 ஆயிரத்து, 135 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஜூனில் மட்டும், 3,000 பஸ்களை அதிகாரிகள் ஓரம் கட்டி உள்ளனர்.

இன்று முதல், தமிழகம் முழுவதும், 500 பஸ்களை, கண்டக்டர்கள் இல்லாமல் இயக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதில், 'ஒன் டூ ஒன், பாயின்ட் டூ பாயின்ட், பைபாஸ் ரைடர், எக்ஸ்பிரஸ் ரைடர்' ஆகிய பெயர்களில், நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்கள், இன்று முதல் கண்டக்டர்கள் இல்லாமல் இயங்கும்.

சோதனை ரீதியாக :

முதற்கட்டமாக, சேலம் கோட்டத்தில், 40; கோவையில், 91; விழுப்புரத்தில், 28; கும்பகோணத்தில், 42; மதுரையில், 10 மற்றும் நெல்லை கோட்டத்தில், 20 என, 231 பஸ்கள், கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கப்பட உள்ளன. நேற்று, பல பஸ்கள், கண்டக்டர் இல்லாமல், சோதனை ரீதியாக இயக்கப்பட்டன.

இது குறித்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'சோதனை ரீதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வரவேற்பை பொறுத்து, அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும்' என்றனர்.

டிக்கெட் எடுப்பது எப்படி?

கண்டக்டர் இல்லாமல் பஸ்களை இயக்கும் திட்டம், சோதனை முயற்சியாக, 'பாயின்ட் டூ பாயின்ட்' எனப்படும், இடையில் நிற்காத பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

* பஸ் நிலையத்தில், ஒரு கண்டக்டர் இருப்பார். அவர், பஸ்களில் பயணிருக்கான டிக்கெட்களை வழங்குவார். பஸ்சில், பயணியர் நிறைந்தவுடன், கதவுகள் தாழிடப்படும். பின், பஸ்களை இயக்க, டிரைவருக்கு, கண்டக்டர்  உத்தர விடுவார். பஸ் உரிய இடத்திற்கு சென்றதும், பயணியர் இறக்கி விடப்படுவர்.

* சேருமிடத்திலிருந்து மீண்டும் கிளம்பும் போதும், பஸ் நிலையத்தில் உள்ள கண்டக்டர், பயணியருக்கு டிக்கெட் வழங்கி, கதவுகளை தாழிட்டு, பஸ்களை இயக்க உத்தரவிடுவார். பயணியர் அளிக்கும் வரவேற்பை பொறுத்து, இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு :

இது குறித்து, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர், சவுந்தரராஜன் கூறுகையில், ''கண்டக்டர் இல்லாமல் பஸ்களை இயக்குவது, போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கும் முயற்சி. இது தொடர்பாக, அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு விரைவில் கூடி, முக்கிய முடிவுகளை எடுக்கும்,'' என்றார். தொ.மு.ச., பேரவையின் மாநில பொதுச்செயலர், மணி கூறுகையில், ''தனியார் பஸ்களின் வருவாயை பெருக்கும் நோக்கில், கண்டக்டர் இல்லாத பஸ்களை அரசு இயக்குகிறது. ஏற்கனவே, சேலம், ஈரோட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், தோல்வியை தழுவியது. சாத்தியமில்லாத திட்டத்தை எதிர்ப்போம்,'' என்றார்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...