Tuesday, July 3, 2018

ரயில் பயணியருக்கு 'டிஸ்போசபிள்' டவல்

Added : ஜூலை 03, 2018 01:47

புதுடில்லி: ரயில்களில், 'ஏசி' பெட்டி களில் பயணிப்போருக்கு, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய, 'டிஸ்போசபிள்' டவலை வழங்கும்படி, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.அனைத்து மண்டல ரயில்வே மேலாளர்களுக்கும், ரயில்வே வாரியம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது, பயணியருக்கு வழங்கப்படும், ஒரு டவலுக்கு, கொள்முதல் விலை மற்றும் துவைப்பதற்கான செலவு உட்பட, 3.53 ரூபாய் செலவாகிறது. அதற்கு பதில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில், கையடக்கமான பருத்தி டவலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.'புதிய டவல்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக, தண்ணீரை உறிஞ்சும் வகையில் இருக்கும்' என, ரயில்வே அதிகாரிகள்கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024