Saturday, October 20, 2018

'எச்1பி' விசாவில் மாற்றம்:இந்தியர்களுக்கு பாதிப்பு
வாஷிங்டன், அமெரிக்காவில், 'எச்-1பி' விசாவில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றத் தால், இந்தியர்களுக்கும், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், பெரும் பாதிப்பு ஏற்படும் என, தகவல் வெளியாகி உள்ளது...dinamalar




அமெரிக்க நிறுவனங்களில், இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் பணியாற்றுவதற்கு, அந்நாட்டு அரசால், 'எச்1பி' விசா வழங்கப்படுகிறது. பணியின் தன்மைக்கு ஏற்ப, இந்த விசா நீட்டிக் கப்படும் போது, அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். அமெரிக்காவில் பணி யாற்றும் வெளிநாட்டவர்களின் மனைவி அல்லது கணவன் மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அமெரிக்கா வருவதற்கு, 'எச்-4' விசா வழங்கப்படுகிறது.

கடந்த, 2015ல், ஒபாமா, அமெரிக்க அதிபராக


இருந்த போது, 'எச்-1பி' விசா பெற்று, நிரந்தர குடி யுரிமைக்காக காத்திருப்போரின் மனைவி அல்லது கணவரும், அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிய வும், வங்கிகளில் கணக்கு துவங்கவும் அனுமதி வழங்கப்பட்டது,அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் பதவியேற்றதும், 'எச்1பி' விசா விதிமுறை கள் கடுமையாக்கப்பட்டன. மேலும், 'எச்௪' விசாவை ரத்து செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

விசா விதிகளை மறு பரிசீலனை செய்யவும், சட்ட வரைவு முன்மொழிவுக்கு, கணிசமான திருத்தங் கள் அவசியம் என்றும், அமெரிக்க குடியுரிமை துறை தீர்மானித்தது. இந்நிலையில், 'எச்1பி' விசா வில் செய்யப்படும் மாற்றங்கள், இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறையை சேர்ந்த உயர் அதிகாரி, இது பற்றி கூறியதாவது: திறமை மிக்க வெளிநாட்டவர்கள், 'எச்1பி' விசா பெறும் வகையிலும், அமெரிக்க பணியாளர்கள் மற்றும்ஊதிய விகிதத்தை பாதுகாக்கும் வகை யிலும், 'எச்௧பி' விசாவுக்கான விதிமுறைகளில், மாற்றம் செய்யப்படும்.

வெளிநாட்டவர்களின் மனைவி அல்லது கணவன், 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு

வழங்கப்படும், எச்4விசாவை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள், அடுத்த ஆண்டு ஜனவரியில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறினார். அமெரிக்கா வில் செயல்படும் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் என, தெரியவந்துள்ளது.

மேலும், 'எச்4' விசா ரத்தால், அங்கு வசிக்கும், 70 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்களும், பெரும் பாதிப்புக்குள்ளாவர் என, தெரிய வந்துள்ளது.இதற்கிடையில், அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை கேட்டு, 6 லட்சம் இந்தியர்கள், மனு கொடுத்துள்ளனர். கடந்த ஆண்டு,60ஆயிரம் பேருக்கு மட்டுமேஅமெரிக்க அரசு, நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024