Sunday, October 7, 2018

பல கோடி பணம் புரண்டதாக ஆளுநர் பேச்சு துணைவேந்தர் யாரென தெரியவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்

2018-10-07@ 01:23:59



சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கமல விநாயகர் ஆலயத்தில் சமபந்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், பொதுமக்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்தில் கலந்துகொண்டார். பிறகு அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: 

ஆளுநர் வந்த பிறகு எந்த முறைகேடும் நடைபெறவில்லை என கூறியுள்ளார். ஆளுநர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எனவே யார் தவறு செய்திருந்தாலும், எந்த துணை வேந்தர் என்று தெரியவில்லை.

தெரிந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் சந்திப்பு குறித்து இருவருமே விளக்கம் அளித்துவிட்டனர். சசிகலா குடும்ப தொடர்பு இல்லாமல், அதிமுகவை நடத்த வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம். சசிகலா, தினகரன் ஆகியோரை மீண்டும், கட்சியில் சேர்த்துக்கொள்ளும் எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை. அந்த முடிவில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024