Sunday, October 14, 2018

2019 ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ்

Added : அக் 14, 2018 06:59 |



புதுடில்லி: அடுத்தாண்டு ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ்கள் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறி இருப்பதாவது: நாடுமுழுவதும் நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் டிரைவிங் லைசென்ஸ் கள் வழங்கவும், புதுப்பிக்கவும் செய்யப்படுகி்ன்றன. அதே போல் நாள் ஒன்றுக்கு 43 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யவும், மீண்டும் புதுப்பிக்கவும் செய்யப்படுகின்றன.

இந்த நடைமுறைகளை ஒருமுகப்படுத்தும் விதமாக வரும் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான லைசென்ஸ் வழங்கும்முறை அமல்படுத்தப்பட உள்ளது.இந்த லைசென்ஸ்கள் ஏடிஎம் கார்டை போன்று இருக்கும். இதில் பொருத்தப்பட்டு இருக்கும் சிப்பில் க்யூ.ஆர். கோடு வழங்கப்படும். இதில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவோரின் அனைத்து விவரங்களும் பதியப்பட்டிருக்கும் இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024