Sunday, October 14, 2018

மொட்டை கடிதங்களை கடாசுங்கள்: அரசு துறைகளுக்கு அதிரடி உத்தரவு

Added : அக் 14, 2018 00:14

புதுடில்லி:'அரசு அதிகாரிகள் மீது, பெயர் குறிப்பிடாமல் அளிக்கப்படும் ஊழல் புகார்கள் தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என, அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தகவல் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசுப் பணியில், ஒருவர் உயர் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் போது அல்லது முக்கியமான பணிக்காக அவர் நியமிக்கப்படும்போது, அவர் மீது, ஏராளமான ஊழல் புகார்கள் அளிக்கப்படுவது வழக்கம்.

இப்படிப்பட்ட புகார்களை அளிப்பவர்கள், பெரும்பாலும் தங்கள் பெயரை குறிப்பிடாமல், புகார்களை மொட்டை கடுதாசியாக அளிக்கின்றனர். கற்பனையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.இதுபோன்ற புகார்களை, சம்பந்தப்பட்ட துறையினர், பதிவு செய்தால் மட்டும் போதும். அதன் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசில் உள்ள அனைத்து துறை அலுவலகத்துக்கும், பணியாளர் நலத்துறை சார்பில், இந்த அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும், மத்திய புலனாய்வுதுறை கமிஷனும், இதே போன்ற ஒரு அறிக்கையை அனுப்பி உள்ளது.

No comments:

Post a Comment

How twins evaded arrest for long time

How twins evaded arrest for long time TIMES OF INDIA NEW DELHI   25.09.2024  On Sept 21, a woman was purchasing fruits at Burari Chowk when ...