Sunday, October 7, 2018

மருத்துவ கல்லுாரியில், 'ராகிங்' 4 மாணவர்கள் மீது நடவடிக்கை

Added : அக் 07, 2018 04:08

கோவை:கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், 'ராகிங்'கில் ஈடுபட்ட, நான்கு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார். இவரை, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக, தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.அவரது பெற்றோர், டில்லியில் உள்ள ராகிங் தடுப்புக் கமிட்டிக்கு புகார் தெரிவித்தனர். 

இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து, அறிக்கை அனுப்ப, கல்லுாரி டீன் அசோகனுக்கு, ராகிங் தடுப்பு கமிட்டி அறிவுறுத்தியது. கல்லுாரியில் செயல்பட்டு வரும், ராகிங் தடுப்பு மையத்தில் விசாரணை நடந்தது.டீன் அசோகன், போலீஸ் கமிஷனர், ஆர்.டி.ஓ., உட்பட, 10 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. பொள்ளாச்சி, தர்மபுரி, திருப்பூரை சேர்ந்த, மூன்றாம் ஆண்டு மாணவர்கள், நான்கு பேர் ராகிங்கில் ஈடுபட்டது உறுதியானது.கோவை அரசு மருத்துவ மனை டீன் அசோகன் கூறியதாவது:ராகிங்கில் ஈடுபட்ட, நான்கு மாணவர்கள், ஓராண்டுக்கு கல்லுாரி விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். சம்பவத்துக்கு முக்கிய காரணமான, மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர், ஒரு மாதம் கல்லுாரியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.ராகிங் குறித்த விழிப்புணர்வு அனைத்து மாணவர்களிடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை, ராகிங் தடுப்பு கமிட்டிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024