Sunday, October 14, 2018


பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு டிசம்பரில் மட்டும் 60 சிறப்பு கட்டண ரயில்கள்

Published : 14 Oct 2018 00:57 IST

சென்னை




பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களையொட்டி வரும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை உட்பட பல்வேறு இடங்களுக்கு 60 சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு டிசம்பர் 2, 10, 17, 24-ம் தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06011) மறுநாள் காலை 9.50 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு டிசம்பர் 4, 11, 18-ம் தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் (06012) மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வந்து சேரும்.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு டிசம்பர் 14, 28-ம் தேதிகளில் இரவு 10.15 மணிக்கு புறப்படும் ரயில் (06001) மறுநாள் காலை 10.30-க்கு செல்லும். மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் டிசம்பர் 9, 16-ம் தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் (06002) அதிகாலை 3.30 மணிக்கு வந்தடையும்.

இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு டிசம்பர் 4, 11, 18, 25-ம் தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06007) மறுநாள் காலை 11.05 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் டிசம்பர் 5, 12, 19, 26-ம் தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் (06008) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும்.

தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு வரும் டிசம்பர் 3, 5, 10, 12, 14, 17, 19, 26, 28, 31-ம் தேதிகளில் மாலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் (06027) மறுநாள் காலை 10.30 மணிக்கு செல்லும். மறுமார்க்கத்தில் இருந்து டிசம்பர் 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 27-ம் தேதிகளில் காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் (06028) மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வரும்.

இதேபோல் சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் (06051), சென்னை சென்ட்ரல் - சந்திரகாச்சி (06058), புதுச்சேரி - சந்திரகாச்சி (06010), எர்ணாகுளம் - ஹைதராபாத் (07118), கொச்சிவேலி - ஹைதராபாத் (07116) என 9 சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் 60 சர்வீஸ்களாக இயக்கப்படுகின்றன. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (14-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வழக்கமாக ஒரே நேரத்தில் 20 அல்லது 30 சிறப்பு ரயில்களே இதுவரையில் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது முதல்முறையாக ஒரே நேரத்தில் 60 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அறிவிக்கப்பட்ட ரயில்கள் அத்தனையும் சிறப்புக் கட்டணத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களாகும்.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...