Thursday, October 18, 2018

ராஜபாளையத்தில் இரிடியம் மோசடி: 7 பேர் கைது

Added : அக் 17, 2018 23:36





ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.ராஜபாளையம் லட்சுமண பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பழனிராகுல். வாடகை கார் உரிமையாளர். இவரது காரை 3 நாட்களுக்கு முன் தென்காசி ரோட்டில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த பாலகிருஷ்ணமேனன் வாடகைக்கு எடுத்துள்ளார். தன்னை நீதிபதி என அறிமுகம் செய்து கொண்ட அவருடன் கேரளாவை சேர்ந்த ரவிச்சந்திரன், சினோபிலிப், பஞ்சாப்பை சேர்ந்த சுப்தயாள் சிங், இக்பால் சிங் ஆகிய 5 பேரும் ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலுக்கு சென்றனர்.போலி நீதிபதிமறுநாள் காரில் ஜமீன்கொல்லங்கொண்டான் சென்றுள்ளனர். அங்கு இரிடிய பொருளை எடுத்து கொண்டு, சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த இருவருடன் லாட்ஜ்க்கு வந்தனர். இவர்கள் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த டிரைவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் விசாரணையில் பாலகிருஷ்ணமேனன் போலி நீதிபதி என தெரிந்தது. 7 பேர் கைதுஇவர்கள் 5 பேரும் ஜமீன் கொல்லங் கொண்டானை சேர்ந்த சகோதரர்கள் பாலகிருஷ்ணன், கணேசன், சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த பாலமுருகன், ராமன் ஆகியோருடன் சேர்ந்து உலோகத்தை உருமாற்றி இரிடியம் எனக்கூறி பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது.தாமிர அண்டாவை பாலிதீன் கவரில் சுற்றி அதை இரிடியம் எனக் கூறி மோசடி செய்துள்ளனர்.7 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.தப்பியோடிய பாலமுருகன், ராமனை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024