ஏர் இந்தியா விமானங்களுக்கு சோதனை மேல் சோதனை
Added : அக் 17, 2018 22:28
திருச்சி, திருச்சியிலிருந்து துபாய் புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இயந்திரக் கோளாறால் நிறுத்தப்பட்டது.திருச்சியில் இருந்து துபாய்க்கு, நேற்று அதிகாலை, 1:20 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது; 82 பயணியர் ஏறி அமர்ந்தனர். அப்போது, விமானத்தை பரிசோதித்த விமானி, விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார்.இதையடுத்து, பயணியர் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். அடுத்து, 2:30 மணிக்கு சார்ஜா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், 30 பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர். மீத பயணியர், ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். பாதி பேர் பயணத்தை ரத்து செய்தனர்.நேற்று மதியம் வரை, மாற்று ஏற்பாடு எதையும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் செய்யவில்லை. இதனால், பயணியர் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். காத்திருந்த பயணியரில் பலரும், நேற்று தங்களது பயணத்தை ரத்து செய்தனர். மாலை, 5:00 மணிக்கு, மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் மீதியிருந்த, எட்டு பயணியர் மட்டும், துபாய்க்கு புறப்பட்டுச் சென்றனர்.கடந்த, 12ம் தேதி, துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. 14ம் தேதி சிங்கப்பூர் புறப்பட்ட விமானம், 'ஏசி' வேலை செய்யாமல் நிறுத்தப்பட்டது.நேற்று மீண்டும் துபாய் விமானம் பழுதடைந்துள்ளது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மீது, பயணியருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment