Thursday, October 18, 2018

பூசணிக்காய் உடைக்காதீங்க'

Added : அக் 18, 2018 01:55




சென்னை, 'ஆயுத பூஜையை, விபத்தில்லாமல் கொண்டாட, சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்க வேண்டாம்' என, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஆயுத பூஜையை முன்னிட்டு, வீடு, கடை, அலுவலகம், ஆட்டோ நிறுத்தம் உள்ளிட்ட பல இடங்களில், பூஜை செய்து, சாலையின் நடுவே, பூசணிக்காய் உடைப்பதை, பலர் வழக்கமாக செய்து வருகின்றனர்.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்துகளில் சிக்குவர். சில சமயம், உயிரிழப்பும் நிகழ்ந்து விடும்.எனவே பொதுமக்கள், இன்று கொண்டாடும் ஆயுத பூஜை விழாவில், சாலையின் நடுவே பூசணிக்காய் உடைப்பதை தவிர்க்க வேண்டும்.விபத்துகள் இல்லாத, ஆயுத பூஜை விழாவை கொண்டாட, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, சென்னை மாநகர போலீசார், நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024