Thursday, October 18, 2018

ஆயுத பூஜை விடுமுறை


Added : அக் 17, 2018 22:34

சென்னை, :தமிழகம் முழுவதும், ஆயுத பூஜையை முன்னிட்டு, மூன்று நாட்களுக்கு, 750 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும், இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை; நாளை விஜய தசமியும் கொண்டாடப்படுகிறது. அதிகரிப்புஇதைத்தொடர்ந்து, சனிக்கிழமை, ஞாயிறு என, அடுத்தடுத்து விடுமுறை வருவதால், பலரும் சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டு கின்றனர். இதற்கேற்ப, அரசு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து, பிற மாவட்டங்களுக்கு செல்ல, நேற்று மட்டும், அரசு பஸ்களில், 12 ஆயிரத்து, 500 பேர் முன்பதிவு செய்திருந்தனர். வழக்கமாக, சென்னையில் இருந்து இயக்கப் படும், 2,275 பஸ்களுடன், நேற்று, 750 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. இன்று, 500க்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.அதேபோல், கோவை, திருப்பூர், திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்தும், பயணியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க, போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.நடவடிக்கைவரும், 21ம் தேதி ஞாயிறு அன்று, பிற மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு அதிகம் பேர் வருவர் என்பதால், கூடுதலாக, 750 பஸ்களை இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துஉள்ளனர். அன்று, சென்னை திரும்ப, 16 ஆயிரம் பேர், அரசு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024