Wednesday, October 10, 2018

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள், 'போனஸ்?'

Added : அக் 09, 2018 22:20

புதுடில்லி: ரயில்வே ஊழியர்களுக்கு, இந்த ஆண்டும், 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.ரயில்வே துறையில் பணியாற்றும், 12.26 லட்சம் ஊழியர்களுக்கு, இந்த ஆண்டுக்கான, 'போனஸ்' தொகையை வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம், டில்லியில் சமீபத்தில் நடந்தது. கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும், ரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.'மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்' என, ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது:டில்லியில் நடந்த, ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் குறித்த கூட்டத்தில், லாபத்தின் அடிப்படையில், 78 நாள் சம்பள தொகையை போனசாக வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், 12.26 லட்சம் ஊழியர்கள் பலன் அடைவர். ஆர்.பி.எப்., எனப்படும், ரயில்வே பாதுகாப்பு படை, ஆர்.பி.எஸ்.எப்., எனப்படும், ரயில் பாதுகாப்பு சிறப்பு படை ஆகியோருக்கு இந்த பலன் கிடைக்காது.அதிகபட்சமாக ஒருவர், 17 ஆயிரத்து, 951 ரூபாய் போனஸ் தொகையாக பெறுவார். மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதும், போனஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024