Tuesday, October 9, 2018


நாளை நவராத்திரி முதல்நாள்

Added : அக் 09, 2018 01:49




மதுரை மீனாட்சியம்மன் நாளை ராஜராஜேஸ்வரியாக காட்சி தருகிறாள்.பண்டாசுரனுக்கு, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவரால் மரணம் ஏற்படாது என சிவன் வரம் அளித்தார். பெண்ணின்றி குழந்தை பிறப்பது சாத்தியமில்லை என்பதால், தன்னை யாராலும் கொல்ல முடியாது என்று ஆணவம் கொண்டான். தேவர்களை துன்புறுத்தி அடிமைப்படுத்தினான். அசுரனுக்கு அடிமையான தேவர்கள் ஆங்கிரச முனிவரிடம் ஆலோசனை கேட்டனர். அவர் அம்பிகையை வழிபட்டு, யாகம் நடத்தும்படி கூறினார். யாகத்தீயிலிருந்து தாயின் சம்பந்தமின்றி, ராஜராஜேஸ்வரியாக அம்பிகை அவதரித்தாள். அசுரனை அழித்து மூவுலகிற்கும் தானே அதிபதி என நிலை நாட்டினாள். ராஜராஜேஸ்வரியை தரிசித்தால் ராஜபோக வாழ்வு அமையும்.நைவேத்யம்: வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், சுண்டல்பாட வேண்டிய பாடல்:மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்துசென்னிகுனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்தபுனிதரும் நீயும்என் புந்தியில் எந்நாளும் பொருந்துகவே..

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024