Tuesday, October 9, 2018

தீபாவளிக்கு முன்  அரசு பஸ், 'ஸ்டிரைக்?'  dinamalar  09.10.2018

சென்னை : தீபாவளி பண்டிகைக்கு முன், அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது, பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



வரும், 23ம் தேதியோ, அதற்குப் பிறகோ, வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக,போக்குவரத்து செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு, தொழிற்சங்கத்தினர், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர்.

நவ., 6ல், தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதையொட்டி, ஸ்டிரைக் நடத்தப் போவதாக கூறியிருப்பது, மக்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியதாவது: ஜனவரியில், ஸ்டிரைக்கில் ஈடுபட்டவர்கள் மீது எடுத்த நடவடிக்கையை, வாபஸ் பெற வேண்டும். நடத்துனர் இல்லாத பஸ்களை இயக்க கூடாது. ஊழியர்கள், ஓய்வுபெறும் நாளில், அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசு, உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், வரும், 23ம் தேதியோ, அதற்கு பிறகோ, காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024