Sunday, October 14, 2018


காவிரி பாலத்தில் திடீர் பள்ளம் கும்பகோணத்தில் பரபரப்பு

Added : அக் 14, 2018 01:29




தஞ்சாவூர்:கும்பகோணம், செட்டிமண்டபம் புறவழிச் சாலையில் உள்ள காவிரி ஆற்றுப் பாலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், 2004ம் ஆண்டு, தாராசுரம் துவங்கி, செட்டிமண்டபம் வரை, 8 கி.மீ.,க்கு, 24.9 கோடி ரூபாய் செலவில், சிறப்பு புறவழிச் சாலையும், அரசலாறு மற்றும் காவிரி ஆறுகளின் குறுக்கே பாலங்களும் கட்டப்பட்டன.நேற்று மதியம், செட்டிமண்டபம் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில், சாலை இணையும் இடத்தில், 1 மீட்டர் சுற்றளவில், பள்ளம் ஏற்பட்டு, பாலம் உள் வாங்கியது.

இதையடுத்து, பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.சப் - கலெக்டர் பிரதீப்குமார் கூறியதாவது:பாலமும், சாலையும் இணையும் இடத்தில், கிராவல் மண் கொட்டி, மணல் நிரப்பப்பட்டு சீரமைக்கப்படும். பணிகள் நிறைவு பெற்றதும், பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024