Friday, October 19, 2018

மருத்துவ படிப்பில் இடம் மறுப்பு; மாணவிக்கு ஒரு லட்சம் நஷ்டஈடு

Added : அக் 18, 2018 22:08

சென்னை, மருத்துவ படிப்பில் இடம் மறுக்கப்பட்ட மாணவிக்கு, ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க, புதுச்சேரி தனியார் கல்லுாரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி, அரியூரில் உள்ள, வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுரியில், மருத்துவ படிப்புக்கு, மிதுனா என்பவர் விண்ணப்பித்தர். 'நீட்' தேர்வில், ௧௫௬ மதிப்பெண் பெற்று, தகுதி பெற்றார். கட்டணத்தை முழுமையாக செலுத்தி, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்றார்; மிதுனாவுக்கு, இடம் ஒதுக்கப்படவில்லை.இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மிதுனா தாக்கல் செய்த மனு:தகுதி இருந்தும் எனக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இதே கல்லுாரியில் இடம் கிடைத்த ஒரு மாணவர், வேறு கல்லுாரிக்கு சென்று விட்டார். மேலும், குறிப்பிட்ட அவகாசத்துக்குள், மூன்று மாணவர்கள் சேரவில்லை. எனவே, எனக்கு இடம் ஒதுக்கியிருக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி, எஸ்.எஸ்.சுந்தர், 'மனுதாரருக்கு, புதுச்சேரியில் உள்ள, 'சென்டாக்' எனப்படும், மத்திய மாணவர் சேர்க்கை குழு இடம் ஒதுக்க வேண்டும். ஒரு இடத்தை, வெங்கடேஸ்வரா கல்லுாரி, காலியாக வைத்திருக்க வேண்டும்' என, இடைக்கால உத்தரவிட்டார்.இந்த உத்தரவுக்கு பிறகும், கல்லுாரியில் சேர்க்காததால், மிதுனா சார்பில், வழக்கறிஞர், எம்.ரவி ஆஜராகி, ''காலையில் இருந்து மாலை வரை, கல்லுாரியில் மிதுனா காத்திருந்தார். இடம் ஒதுக்கப்பட்டது குறித்து, கல்லுாரி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தியும், சென்டாக் பரிந்துரைத்த பட்டியலில் இருந்து தேர்வு செய்யாமல், நிர்வாகம் தேர்வு செய்த பட்டியலில் இருந்து, நிரப்பி விட்டனர்,'' என்றார்.இதையடுத்து, நீதிபதி, எஸ்.எஸ்.சுந்தர் பிறப்பித்த உத்தரவு:கல்லுாரியின் நிலைப்பாடு, நம்பும்படியாக இல்லை; அதன் செயல்பாடும் முறையற்றது. இது, அதிர்ச்சி அளிக்கிறது. நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. மாணவிக்கு, இடம் ஒதுக்கப்படாதது, சட்டவிரோதமானது. மாணவர்கள் சேர்க்கை முடிந்த பின் தான், நீதிமன்ற உத்தரவு கிடைத்ததாக கூறுவது தவறு.எனவே, புதுச்சேரியில் உள்ள, ஏதாவது ஒரு தனியார் மருத்துவ கல்லுாரியில், மனுதாரருக்கு, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ், ௨௦௧௯ - ௨௦௦௦ம் ஆண்டுக்கு, இடம் ஒதுக்க வேண்டும். இந்த கல்வியாண்டில் இடம் மறுக்கப்பட்டதால், மனுதாரருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க, வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரிக்கு உத்தரவிடப்படுகிறது.இந்த கல்லுாரிக்கான, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான மொத்த இடங்களில், ஐந்து இடங்களை குறைக்க வேண்டும். சென்டாக் அனுப்பிய பட்டியலில் அல்லாதவர்களை, காலியிடங்களில் நிரப்பியதால், அந்த சேர்க்கையை ரத்து செய்ய, மருத்துவ கவுன்சில் அல்லது சென்டாக், நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024