Friday, December 21, 2018

ராமேஸ்வரம் ரயில்கள் மதுரையிலிருந்து புறப்படும்

Added : டிச 20, 2018 23:37



ராமேஸ்வரம், பாம்பன் ரயில் துாக்கு பால பணிகள் முடிவடையாததால் இதுவரை மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்ட ரயில்கள் ஜன., 2 வரை மதுரையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பாம்பன் ரயில் பாலம் நடுவில் துாக்கு பாலத்தில் இரும்பு பிளேட்டில் டிச.,4ல் விரிசல் ஏற்பட்டது. ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு புதிய பிளேட் பொருத்தும் பணி முழுவீச்சில் நடக்கிறது.228 டன் எடையுள்ள துாக்கு பாலத்தில், இரு பாலமும் இணையும் இடத்தில் சற்று தாழ்வாக இருந்ததால் நேற்று மதுரை கோட்ட ரயில்வே பொறியாளர்கள் ஜாக்கி மூலம் சமமாக வைத்து அடிப்பகுதியில் புதிய இரும்பு பிளேட்டை பொருத்தினர். இப்பணியின் போது அதிர்வு, விரிசல் ஏற்படுகிறதா என்பதை கண்டறிய பாலத்தில் அதிநவீன கேமரா பொருத்தி மானிட்டர் மூலம் கண்காணித்தனர்.ஜன.,2 வரை பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் இதுவரை மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இயக்கப்பட்ட கன்னியாகுமரி, திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மதுரையில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024