இணையத்தில் தேடும் பழக்கம் கொண்டவர்கள் தங்களை அறிவாளிகளாக நினைத்துக்கொள் வதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதில் ஒன் றும் தவறில்லைதான். ஆனால் இணையவாசிகள் தங்கள் அறிவுத் தகுதியை விட கூடுதலான அறி வை கொண்டிருப்பதாக நினைத்துக்கொள்ள வைக்கிறது என்பதுதான் ஆய்வில் கவனிக்க வேண்டிய விஷயம்.
அதாவது இணையவாசிகள் தங்களது இயல்பான அறிவை விட கூடுதலான அறிவு தங்களுக்கு இருப்பதாக கற்பிதம் செய்துகொள்வதாக இந்த ஆய்வை முன்னின்று நடத்திய யேல் பலகலைக்கழக ஆய்வாளர் மேத்யூ பிஷர் சொல்கிறார்.
இணையத்தில் ஒரு விஷயத்தை தேடும்போது உலகின் ஒட்டுமொத்த அறிவாற்றலும் விரல் நுனியில் கிடைக்கிறது. இது தகவல்கள் எல்லாம் இணையத்தில் இருக்கிறது என்று நினைக்க வைப்பதற்கு மாறாக தங்கள் தலைக்குள்தான் இருப்பதாக இணையவாசிகளை நினைக்க வைப்பதாக பிஷர் சொல்கிறார். நம் முடைய சொந்த அறிவை, வெளியே இருக்கும் அறிவுடன் குழப்பிக்கொண்டு ஒருவர் தன்னை தானே மிகுந்த அறிவாளியாக நினைத்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது என்கிறார் பிஷர்.
பிஷர் இதை சும்மா சொல்லவில்லை. இணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் மத்தியில் சோதனை நடத்தி அந்த ஆய்வின் அடிப்படையில் இதை உறுதியாக சொல்கிறார். இந்த ஆய்வின் முடிவு அமெரிக்க உளவியல் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வின்போது பயனாளிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்து குறிப்பிட்ட கேள்வியை கேட்டுள்ளனர். ஒரு பிரிவு இணைய தேடலில் ஈடுபடுபவர்களை கொண்டது. இணைய பிரிவு சாதாரணமானவர்களை கொண் டது. இந்த கேள்விக்கான இணைய இணைப்பையும் முதல் பிரிவிடம் கொடுத்துவிட்டு அதன் பிறகு தொடர் பே இல்லாத கேள்விகளை கேட்டுள்ளனர். அப்போதும் தேடலில் ஈடுபடும் பிரிவினர் தங்களுக்கு அதிக விஷயம் தெரியும் என்பது போல கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் இணைய தேடலில் ஈடுபடுபவர்கள் இணையத்தின் மூலம் கிடைக்கும் தகவல்களை தங்களது மூளையில் சேமிக்கப்பட்டிருக்கும் தகவலாக நினைத்துக்கொண்டு ஓவர் அறிவாளிகளாக நினைத் துக்கொண்டு விடுகின்றனர். இதுதான் ஆய்வின் மூலம் தெரிய வரும் செய்தி.
ஆனால் இப்படி ஒரு சோதனையை மட்டும் வைத்துக்கொண்டு இணையவாசிகள் பற்றி முடிவுக்கு வரமுடி யுமா? என்ன? அதுதான் பிஷர் குழு மேலும் 8 விதமான சோதனைகளை நடத்தியிருக்கிறது. மூளையின் செயல்பாடு பற்றிய புகைப்படத்தை தேர்வு செய்ய சொல்வது உள்ளிட்ட சோதனைகளை நடத்தியுள்ளனர். ஒரு சோதனையில் சரியான முடிவுகளே இல்லாத வகையில் தேடலை அமைத்து கேள்வி கேட்டபோதும் தேடல் பிரிவு தாங்கள் அறிவாளிகள் என கூறியுள்ளது.
மாறாக சுயசரிதை சார்ந்த கேள்விகள் கேட்டபோது இரு தரப்பினருமே ஒரே மாதிரி பதில் அளித்துள்ளனர். இவை எல்லாவற்றையும் வைத்து ஆய்வு செய்துதான், பிஷர் இணைய தேடல் ஒருவரை அவருக்கு இருப் பதைவிட மேலும் அறிவாளியாக நினைத்துக்கொள்ள வைப்பதாக பிஷர் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு தெரிந்தது மற்றும் உங்களுக்கு தெரிந்ததாக நினைப்பது, இரண்டுக்குமான இடைவெளி இணை யம் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என்கிறார் அவர். பிஷர் சொல்வது சரியா? உங்கள் அனுபவத்தின் படி கேட்டுப்பாருங்கள்!
- சைபர்சிம்மன்
No comments:
Post a Comment