Friday, April 3, 2015

என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மாணவ–மாணவிகள் கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி பேட்டி

என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மாணவ–மாணவிகள் கண்ணியமாக உடை அணிந்து செல்லவேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரி கூறினார்.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 580–க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., பி.ஆர்க்., எம்.ஆர்க். உள்ளிட்ட படிப்பை ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். மொத்தத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள். அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகம் செய்து வருகிறது.
இவர்களுக்கு உடை கட்டுப்பாடு குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கண்ணியமாக உடை அணிய வேண்டும் உடை கட்டுப்பாடு மாணவ– மாணவிகளுக்கு மிக தேவையான ஒன்று. இதை அந்தந்த கல்லூரி டீன்கள் கண்காணித்து வருகிறார்கள். இதுவரை மாணவர்களின் ஆடை கட்டுப்பாடு குறை குறித்து புகார் எதுவும் வரவில்லை. மாணவ– மாணவிகள் கல்லூரிகளுக்கு கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும்.
மாணவராக இருந்தால் டி–சர்ட், பனியன் ஆடை அணியக்கூடாது. முழுக்கால் சட்டை, சட்டை அணிந்து வரலாம். மாணவிகள் ஜீன்ஸ் பேண்ட், டி.சர்ட், பனியன் ஆடை, கை இல்லாத ரவிக்கை ஆகியவை அணியக்கூடாது. மாறாக சேலை அணியலாம். சுரிதார் அணிந்து வரலாம். மொத்தத்தில் கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும். இப்படித்தான் பெரும்பாலான கல்லூரிகளில் நடைமுறையில் உள்ளது.
செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செல்போன்கள் இன்றைய காலக்கட்டத்தில் அவசியம்தான். கல்லூரிகளுக்கு செல்போன் கொண்டு வரலாம். ஆனால் வகுப்புக்கு செல்லும் முன் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். வகுப்பு முடிந்த பின்னர் செல்போனை ஆன் செய்து கொள்ளலாம். உடைகளையும், செல்போன்களையும் டீன் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Medical council to cancel exprincipal’s registration

Medical council to cancel exprincipal’s registration  RG KAR MED COLLEGE RAPE AND MURDER Sumati.Yengkhom@timesgroup.com  Kolkata : The West ...