மருத்துவமனையில் 'சிங்கம்' தப்பி ஓட்டம்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 'ரிமாண்ட்' கைதி சிங்கம் என்ற ராஜா,48, தப்பினார். இதுகுறித்து சிறை காவலரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த இவர், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். நவ.,8 ல் மதுரை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருக்கு பால்வினை நோய் இருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து நவ.,9 காலை 10:30 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் அதற்கான வார்டில் அனுமதிக்கப்பட்டார். பொதுவாக சிறை கைதிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தால், அவர்களுக்கென உள்ள வார்டு எண் 111ல் அனுமதிக்கப்படுவர். ஆனால் சிங்கம் என்ற ராஜா, பால்வினை நோயால் அங்கு அனுமதிக்கப்படவில்லை.
அவர் சிகிச்சை பெற்றது பொது வார்டு என்பதால், சிறை காவலர்கள் பாதுகாப்பில் இருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை காவலர்கள் 'அசந்த' நேரத்தில் சிங்கம் தப்பிச்சென்றார்.
சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட்: மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியதையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததற்காக சிறைக்காவலர்கள் தியாகராஜன், தமீம்அன்சாரியை சஸ்பெண்ட் செய்து கண்காணிப்பாளர் ஊர்மிளா உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment