தேர்வு நாளில் மாரத்தான் : அலைக்கழித்த அமைச்சர்
Added : நவ 11, 2017 02:09
திருநெல்வேலி: திருநெல்வேலியில் கல்லுாரி, பல்கலை தேர்வுகள் நடக்கும் நேரத்தில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா மாரத்தான் போட்டி நடத்தி, மாணவர்களை அலைக்கழித்தனர்.
திருநெல்வேலியில் நாளை, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடக்கிறது. முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். நேற்று காலை, கல்லுாரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி, காலை, 7:00 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் ராஜலட்சுமி, பிரபாகரன் எம்.பி., ஆகியோர், 8:00 மணிக்கு தான் வந்தனர். அதன் பின், போட்டி துவங்கியது.
பங்கேற்பாளர்கள், ஐகிரவுண்டில் இருந்து திருச்செந்துார் சாலையில், வி.எம்.சத்திரம் வரை சென்று, காலை, 9:30 மணிக்கு திரும்பினர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மற்றும் கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வுகள் நடக்கின்றன.
இந்நிலையில், 9:30 மணி வரை அலைக்கழிக்கப்பட்ட மாணவர்கள், அவசர அவசரமாக கல்லுாரிகளுக்கு சென்றனர்.
No comments:
Post a Comment