Tuesday, November 21, 2017

முட்டை விலை, 'கிடுகிடு' உயர்வு : 25 காசு குறைத்தே கொள்முதல்

Added : நவ 20, 2017 22:12

நாமக்கல்: முட்டை விலை, 516 காசுகளாக உயர்ந்துள்ள நிலையில், 25 காசுகள் மைனஸ் விலைக்கு, வியாபாரிகள் கொள்முதல் செய்ய, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு எனும், 'நெக்' அமைப்பு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

சேலம், நாமக்கல், மாவட்டங்களில், 1,000 பண்ணைகளில் உள்ள, ஐந்து கோடி கோழிகள் மூலம், தினமும், 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு - நெக், நிர்ணயிக்கும் விலைக்கே, வியாபாரிகள் முட்டை கொள் முதல் செய்ய வேண்டும்.


கடந்த, 1ம் தேதி, 420 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை கொள்முதல் விலை, படிப்படியாக உயர்ந்து, 16ம் தேதி, 516 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
வரலாற்றில் உச்சபட்ச விலை என்பதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆயினும், வியாபாரிகள், பண்ணையாளர்களிடம், 25 காசுகள் மைனஸ் விலைக்கே, முட்டை கொள்முதல் செய்கின்றனர்.

பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது: 'நெக்' நிர்ணயம் செய்யும் விலைக்கே, வெளி மாவட்டத்துக்கு முட்டை விற்பனை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், வியாபாரிகளுக்கு எவ்வித பயனும் இல்லை. அதனால், நெக், கொள்முதல் விலையில் இருந்து, மைனஸ், 25 காசுக்கு விற்பனை செய்ய பரிந்துரை செய்கிறது. இந்த விலை, லாரி ஏற்று, இறக்கு கூலி, வண்டி வாடகை, டிரைவர் படி, டீசல் செலவு என்பதை கருத்தில் கொண்டு, மைனஸ், 25 காசுகள் குறைத்து கொள்முதல் செய்கின்றனர். தற்போது, ஒரு முட்டை உற்பத்தி செய்ய, 340 முதல், 350 காசுகள் வரை செலவாகிறது. இதில், பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது என்பதால், பண்ணையாளர்களும், மைனஸ் விலைக்கே முட்டையை விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...