Wednesday, July 4, 2018

`61 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் கடந்து செல்லும் ஆமை வேக ரயில்' - தவிக்கும் காரைக்குடி பயணிகள்!



பாலமுருகன். தெ


சாய் தர்மராஜ்.ச





காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரை இயங்கும் ரயிலை மதுரை வரைக்கும் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை காரைக்குடி மக்களிடம் வலுத்திருக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆதிஜெகநாதன் கூறுகையில், ``காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரைக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து பட்டுக்கோட்டை மொத்தமே 61 கி.மீ தூரம் தான். இந்தத் தூரத்தை கடப்பதற்கு ஏழு மணி நேரம் ஆகிறது. இதைவிடக் கொடுமையான விசயம் என்னவெனில் ரயில் டிரைவர் அருகில் இரண்டு பேர் இருக்கிறார்கள்.



அவர்களில் ஒருவர் கேங்க்மேன், இன்னொருவர் கேட் கீப்பர். காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வரைக்கும் 35 கேட் இருக்கிறது. ஒவ்வொரு கேட்டிலும் ரயிலை நிறுத்தி ஏற்கனவே ரயிலில் இருந்து வரும் கேட் கீப்பர் கேட்டை அடைப்பார். ரயில் நகர்ந்ததும் கேட் மேன் கேட்டை அடைத்து விட்டுச் செல்லுவார். இப்படியே 35 கேட்டுகளை கடந்து செல்லுவதற்கு கிட்டத்தட்ட ஏழுமணி நேரம் ஆகிறது. இத்தனை மணி நேரம் செல்லும் ரயிலில் கழிப்பறை வசதி கிடையாது. நோயாளிகள், முதியோர்கள், பெண்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தென்னக ரயில்வே நிர்வாகம் மோசமாக இருக்கிறது என்பதற்குச் சான்றான இதைவிட மோசமான ஒருவிசயம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. இந்த ரயிலுக்குத் தேவையான டீசல் பிடிக்க வேறு இடத்திற்குச் செல்ல வேண்டி இருக்கிறது. வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மானாமதுரை வழியாக மதுரை வரைக்கும் சென்றால் மானாமதுரையில் டீசல் பிடிக்கலாம். அதே நேரத்தில் பயணிகள் எண்ணிக்கையும் கூடும். பயணிகள் பஸ்சில் மதுரை வரைக்கும் பயணம் செய்யக் குறைந்தது நூறுரூபாய் செலவு ஆகிறது. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வர இருப்பதால் தஞ்சை, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை மாவட்ட மக்கள் இந்த ரயில் சேவையால் நிறையவே பயன்படுவார்கள் என்கிற கோரிக்கை காரைக்குடி மக்களிடம் வலுத்திருக்கிறது என்கிறார் சமூக ஆர்வலரான ஆதிஜெகநாதன்.

No comments:

Post a Comment

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...