Thursday, July 5, 2018

கடலூரில் இருந்து சென்னைக்கு இடைநில்லா பஸ்கள் இயக்கம்

Added : ஜூலை 05, 2018 00:41

கடலுார்: கடலுாரில் இருந்து சென்னைக்கு அதிநவீன இடை நில்லா பஸ் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக கடலுார் மண்டல பொது மேலாளர் சுந்தர் கூறியதாவது:போக்குவரத்து துறையை சீரமைக்கும் பொருட்டு தமிழக அரசு 134 கோடி ரூபாய் செலவில் 515 புதிய பஸ்களை வாங்கியது. அதனை தேசிய தரக்கட்டுப்பாடு அடிப்படையில் கூண்டு (பாடி) கட்டியதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இந்த பஸ்களை தமிழக முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் கடலுார் மண்டலத்திற்கு 30 பஸ்கள் ஒதுக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக நேற்று முன்தினம் 6 பஸ்கள் வழங்கப்பட்டன. அதில் 3 பஸ்கள் திண்டிவனம் மார்க்கமாகவும், 3 பஸ்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.இந்த பஸ்கள் கடலுாரில் புறப்பட்டு புதுச்சேரி, திண்டிவனம், மேல்மருவத்துார் எங்கும் நிற்காமல் புறவழிச் சாலையில் செல்லும். இந்த பஸ்கள் பெருங்களத்துாரில் இருந்து முக்கிய ஊர்களில் பயணிகள் இறங்கிக் கொள்ளலாம்.அதேபோன்று கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் இடைநில்லா பஸ்கள் திருவான்மியூரில் இருந்து முக்கிய நிறுத்தங்களில் பயணிகள் இறங்கி கொள்ளலாம். கண்டக்டர் இன்றி இயக்கும் வகையில் இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், பஸ் புறப்படும் கடலுார் அல்லது சென்னையில் டிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும்.

இடைநில்லா பஸ்கள் கடலுார் மற்றும் சென்னையில் புறப்படும் கால அட்டவணை

:திண்டிவனம் மார்க்கம் கடலுார்: காலை 3:30; 7:00; 11:00; பகல் 1:30; மாலை 5:00; இரவு 11:00 மணிக்கும்; சென்னையில் இருந்து காலை 5:00; 8:30; பகல் 12:00; மாலை 4:00, இரவு 7:00; 10:30 மணிக்கும் புறப்படுகிறது.

கிழக்கு கடற்கரை சாலை மார்க்கத்தில் கடலுாரில் காலை 3:00; 4:30; 5:00; பகல் 2:00; 2:30; மாலை 4:00 மணிக்கும், சென்னையில் இருந்து காலை 7:30; 9:30; 10:30; இரவு 7:30; 8:00; 10:00 மணிக்கும் புறப்படுகிறது. பயண நேரம் நான்கு மணிநேரம் ஆகும்.இவ்வாறு பொதுமேலாளர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024