Thursday, July 5, 2018

சிவகங்கையில் ரசாயன பச்சை பட்டாணி

Added : ஜூலை 05, 2018 00:04



சிவகங்கை: சிவகங்கை வாரச்சந்தையில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய, ரசாயனம் கலந்த பச்சை பட்டாணி விற்கப்படுகிறது. நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்தது பச்சை பட்டாணி. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். கர்ப்பிணி, குழந்தைகளுக்கு சிறந்த உணவு. சிவகங்கை வாரச்சந்தையில் நேற்று தோல் உறித்த பட்டாணியை வியாபாரிகள் விற்பனை செய்தனர். அவை 'பச்சை பசேல்' என, இருந்தது. அவற்றை வாங்கி தண்ணீரில் ஊற வைத்தபோது தண்ணீர் பச்சை நிறமாக மாறியது. அதில் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உலர் பட்டாணியை விட, பச்சை பட்டாணி விலை அதிகம். இதனால் உலர் பட்டாணியை பளிச்சென பச்சை நிறமாக தெரிவதற்கு 'மாலாசைட் கிரீன்' என்ற ரசாயனத்தை கலக்கின்றனர். இது தடை செய்யப்பட்ட ரசாயனம். இந்த ரசாயனம் கலந்த நீரில் உலர் பட்டாணியை முதல்நாளே ஊறவைத்து மறுநாள் பச்சை பட்டாணியாக விற்பனை செய்கின்றனர். இதை தொடர்ந்து உண்ணும்போது புற்றுநோய், மரபணு மாற்றம் போன்றவை ஏற்படும். மலட்டு தன்மையும் உண்டாகும். தோலுள்ள பட்டாணியை வாங்கி பயன்படுத்துவதே நல்லது, என்றார்.

No comments:

Post a Comment

TN govt: Have already taken possession of MRC premises

TN govt: Have already taken possession of MRC premises  TIMES NEWS NETWORK  20.09.2024  Chennai : Tamil Nadu govt has told Madras high court...