Thursday, July 5, 2018

அரசு பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 180 நாள் லீவு: மனைவியை இழந்த ஆண்களுக்கும் பொருந்தும்

2018-07-05@ 00:29:46



மும்பை: குழந்தை பராமரிப்புக்காக பெண் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 180 நாள் விடுமுறை கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது.மகாராஷ்டிரா அரசு குழந்தைகள் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக பெண் அரசு ஊழியர்கள் மற்றும் மனைவியை இழந்த ஆண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 180 நாள் விடுமுறை கொடுக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக இக்கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இத்தகவலை மாநில நிதியமைச்சர் சுதிர் முங்காந்திவர் தெரிவித்தார்.

தற்போது பெண்களுக்கு பிரசவ விடுமுறையாக 180 நாட்கள் வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை இரண்டு குழந்தைகளுக்கு பொருந்தும். தற்போது குழந்தை பராமரிப்புக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டு இருப்பதற்கு அரசு ஊழியர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.மனைவியை இழந்த ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்புக்கு இந்த விடுமுறை எடுக்க முடியும். மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்கு 2 ஆண்டுகள் விடுமுறை வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024