Wednesday, July 4, 2018

எம்.பி.பி.எஸ்.: அரசு கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுவரை 1,329 மாணவர்களுக்கு: தமிழகத்தில் மொத்தம் 2,447 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன; இவற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வில் 1,329 மாணவர்களுக்குஅரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து1,118 எம்.பி.பி.எஸ். காலியிடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அனைத்துப் பிரிவினருக்கு திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது.

1,118 காலியிடங்கள்: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 828 பேர் அழைக்கப்பட்டு, 813 பேர் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 719 இடங்கள் நிரம்பின. சென்னையில் உள்ள நான்கு மருத்துவக் கல்லூரிகளிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பின. மூன்று நாள்கள் கலந்தாய்வின் முடிவில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,118 காலியிடங்கள் உள்ளன. இதுதவிர, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 29 இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடம், தனியார் கல்லூரிகளில் 59 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 808 இடங்கள் நிரம்பின.

4 இடங்கள்: பொதுப் பிரிவினருக்கு நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு: தரவரிசைப் பட்டியலில் 1,418 -இலிருந்து 2,380 வரையிலான 963 அனைத்துப் பிரிவு (ஓ.சி.) மாணவர்களுக்கு புதன்கிழமை கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.
 
ssta

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024