Wednesday, July 4, 2018

'வாட்ஸ் ஆப்'புக்கு மத்திய அரசு கண்டனம்

பொய் தகவல்கள் மற்றும் வெறுப்பு உணர்வை துாண்டும் வகையிலான விஷயங்களை பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, பிரபல சமூக ஊடகமான, 'வாட்ஸ் ஆப்'பை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் குழந்தை திருடர்கள் என்ற சந்தேகத்தில் பலர் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்களால், சமீபத்தில் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்அதிர்ச்சியை ஏற்படுத்தின.வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதே இதற்குகாரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய தகவல் தொடர்பு துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டின் பல்வேறு பகுதிகளில் வதந்திகளால், பலர் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.இவை கடும் கண்டனத்துக்கு உரியவை. இதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கும்படி வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...