Wednesday, December 18, 2019

கல்லூரிகளுக்கு அடிப்படை வசதிகள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Added : டிச 17, 2019 22:28

சென்னை : கல்லுாரிகளில் அடிப்படை வசதிகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, யு.ஜி.சி., உத்தர விட்டுள்ளது. நாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் அனைத்தும், பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் விதிகளை பின்பற்றியே செயல்படுகின்றன. கல்லுாரிகளின் உள் கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள் சம்பளம், ஆராய்ச்சி படிப்புக்கான உதவி என, பல வகையில், யு.ஜி.சி., தரப்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்நிலையில், அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், இரு பாலரும் தனித்தனியே பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக சாய்வு பாதைகள், குடிநீர் வசதி, வகுப்பறை கட்டட வசதிகள் உள்ளதா என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, கல்லுாரிகள் மற்றும்பல்கலைகளுக்கு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024