முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள் காலையில் தினசரிகளைப் படித்த, வானொலி செய்தியைக் கேட்ட, தொலைக்காட்சியில் பார்த்த உலகத்தினர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த சோகப் பொழுது அது. ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு, உலகமே அதிர்ந்த துயரம் முப்பதாண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் நிகழ்ந்தது.
1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி நள்ளிரவு நேரம். மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைட் நிறுவனத்தின் பூச்சிமருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலையில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. துருப் பிடித்த குழாய்கள், கசிந்து கொண்டிருந்த அடைப்புத் தடுக்குகள் (வால்வ்) ஆகியவை காரணமா என்று தெரியவில்லை. குழாய் உடைந்து தண்ணீர் அங்கிருந்த ரசாயனம் தேக்கி வைத்திருந்த தொட்டி ஒன்றில் பாயத் தொடங்கியது.
இ - 610 (E-610) எண்ணுள்ள அந்தத் தொட்டியில் 60 டன் மீதைல் ஐசோ சயனேட் (எம்.ஐ.சி) என்கிற உயிர்க்கொல்லி ரசாயனம் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு விஷத்தன்மையுடையது என்றால், அந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளி, தினந்தோறும் பத்து லட்சத்தில் 0.002 பங்குக்கு அதிகமாக அந்த ரசாயனக் கலவையின் நெடிகூடப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கு அதி ஆபத்தான ரசாயனம்.
இந்த மீதைல் ஐசோ சயனேட்டில் தண்ணீர் கலந்ததும், அதனால் உருவான வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் எம்.ஐ.சி., ஹைட்ரஜன் சயனைட், மோனோமீதைல் அமைன், கார்பன் மோனோ ஆக்சைட் தொடங்கிய 16 ரசாயன வாயுக்கள் புகைமண்டலமாக எழுந்தன. ஏறத்தாழ 40 டன் விஷவாயு உற்பத்தியாகி அடுத்த சில வினாடிகளில் சுற்றிலும் புகைமண்டலமாகப் பரவத் தொடங்கியது.
எந்தவொரு ஆபத்தான ரசாயனத் தொழிற்சாலையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டுமல்லவா? ஆபத்து நிறைந்த யூனியன் கார்பைடின் போபால் பூச்சிமருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் பாதுகாப்புக் கருவிகள் இந்த அளவிலான வெப்பத்தையும், அழுத்தத்தையும் எதிர்கொள்ளும் அளவில் அமைக்கப்பட்டிருக்கவில்லை. அங்கே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உபகரணங்களும் செயல்பாட்டில் இருக்கவில்லை அல்லது சரியாக வேலை செய்யவில்லை அல்லது பராமரிப்பில் இருந்தன.
பிறகென்ன? புகைமண்டலம் மேலெழுந்து அந்தத் தொழிற்சாலையை அப்படியே சூழ்ந்து கொண்டுவிட்டது. இரவு நேரக் காற்றின் துணையுடன் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த போபால் நகரப் பகுதிகளையும் தனது மரணப் பிடியில் சிக்க வைக்கும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது விஷவாயு. சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்களின் நுரையீரல்களில் நுழைந்து மரண தாண்டவமாடத் தொடங்கிவிட்டிருந்தது அந்த உயிர்க்கொல்லி ரசாயன வாயு.
இருபது, முப்பது அடிகளுக்கு ஒன்றும் தெரியாத அளவுக்குப் புகைமண்டலமாகக் காட்சி அளித்தது. அதிகாலை ஒரு மணி அளவில் போபால் நகரின் பல பகுதிகள் ஒரு விஷவாயுக் கொலைக்களனாகக் (Gas chamber) காட்சி அளித்தன.
அந்தத் தொழிற்சாலையே புகைமண்டலத்தால் சூழப்பட்டிருக்கிறது. உடனடியாக, எச்சரிக்கை ஒலிப்பான் ஒலித்திருக்க வேண்டுமா இல்லையா? ஒலிக்கவில்லை என்பதல்ல உண்மை. அது அணைக்கப்பட்டுக் கிடந்தது என்பதுதான் கொடுமை. அதனால் விஷவாயு போபால் நகர மக்களின் நுரையீரல்களில் நுழைந்து, கண்கள் எரியத் தொடங்கியபோதுதான் எங்கேயோ விஷவாயுக் கசிவு ஏற்பட்டிருக்கிறது என்பதே மக்களுக்குத் தெரியத் தொடங்கியது.
அதிகாலை ஒரு மணி அளவில், மூச்சுத் திணறலுடனும், இருமலுடனும் போபால் நகர மக்கள் திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் எங்கும் புகைமண்டலம். அருகில் இருப்பவர்களைக்கூடச் சரியாக அடையாளம் காண முடியவில்லை. கண்களில் எரியும் கொள்ளியைச் சொருகியதுபோல எரிச்சல். அங்குமிங்கும் மக்கள் ஓடத் தொடங்கினார்கள். புகைமண்டலத்திலிருந்து விடுபட்டால் போதும் என்கிற பயத்திலும், பீதியிலும் அலறி அடித்துக்கொண்டு ஓடியவர்களில் பலர் தடுக்கி விழுந்து இறந்துபோன சோகக் கதைகள் ஏராளம்.
அதற்குப் பிறகு அங்கே ஏற்பட்ட கலவரச் சூழலில் பெற்றோரிடமிருந்து பிரிந்து சென்ற குழந்தைகள் பலர். அங்குமிங்கும் பரபரப்பில் ஓடுபவர்களால் மிதிபட்டு இறந்த குழந்தைகளும், முதியவர்களும் கணக்கிலடங்கார்.
விஷவாயுவைச் சுவாசித்த அடுத்த சில வினாடிகளில் பலருக்கும் அவர்களது கழிவு உறுப்புகள் மீதிருந்த கட்டுப்பாடு தளர்ந்தது. அவர்களையறியாமலே சிறுநீரும், மலமும் போகத் தொடங்கின. புகைமண்டலத்தில் கழிவறையைத் தேடிச் செல்லும் நிலையிலும் அவர்கள் இல்லை. இன்னும் பலர் கட்டுப்படுத்தவே முடியாமல் வாந்தியெடுக்கத் தொடங்கி விட்டிருந்தனர். விஷவாயுவின் குமட்டல் நெடியால் இருமலும் வாந்தியுமாக அவஸ்தைப்பட்டவர்கள் ஏராளம்.
பலர் விஷவாயுவின் தாக்குதலைத் தாங்கும் சக்தி இல்லாமல் விட்டில் பூச்சிகள்போல செத்து விழுந்தனர். ஏதோ நுரையீரல் தீப்பிடித்து எரிவதுபோலவும், வெடித்துவிடும் போன்றதுமான உணர்வுடன் மடிந்து விழுந்தவர்கள் ஏராளம். விஷவாயுவின் தாக்கத்தால் நுரையீரலில் நீர் நிறைந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தவர்கள் பலர். பலருடைய மரண வாக்குமூலங்களும், பிரேதப் பரிசோதனைகளும் தெரிவிக்கும் தகவல்கள் இவை.
நூற்றுக்கணக்கில் தொடங்கி, ஆயிரக்கணக்கானோர் உயிருடன் போராடிக்கொண்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டபோது அவர்களுக்கு என்ன சிகிச்சை தருவது என்றுகூடத் தெரியாமல் விழித்தனர் அரசு மருத்துவர்கள். எந்தவிதமான விஷவாயு தாக்கியிருக்கிறது என்பது தெரியாததால், அதற்கு மாற்று மருந்து என்ன என்பதை அவர்களால் கண்டறியவோ, ஊகிக்கவோ முடியவில்லை. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் மருத்துவ அதிகாரியைத் தொடர்புகொண்டு கேட்டால், அவர் சொன்ன விசித்திரமான பதில் என்ன தெரியுமா?
""கண்ணீர்ப் புகைக் குண்டு வெளிப்படுத்தும் புகை போன்றதுதான் இதுவும். அதனால் கண்களைத் தண்ணீர் விட்டுக் கழுவினாலே போதும். எரிச்சல் நின்றுவிடும்!'' என்பதுதான் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி அவர் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்குச் சொன்ன பதில். போபால் நகரில் பணக்காரர்கள் குடியிருக்கும் பகுதியில் பத்திரமாக வசித்து வந்த தொழிற்சாலை மருத்துவர் சம்பவம் நடந்த இடத்துப் பக்கம் தலைகாட்டக்கூட இல்லை.
மருத்துவமனைகளின் பிண அறைகள் இறந்தவர்களின் சடலத்தால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தன. வீட்டுக்கு வீடு, தெருவுக்குத் தெரு ஆங்காங்கே மனிதச் சடலங்கள். அடுத்த மூன்று நாள்களும், மூன்று இரவுகளும் தொடர்ச்சியாக சடலங்கள் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டு வந்தன. போபாலின் பல்வேறு இடங்களில் இதுபோல கூட்டாக எரியூட்டு நடந்தவண்ணம் இருந்தது.
விஷவாயு தாக்கியதால் உடனடியாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்கிற நிஜமான கணக்கு கிடைக்கவே போவதில்லை. முதல் நாளில் மட்டுமே விஷவாயுவால் தாக்கப்பட்டு ஏறத்தாழ 8,000 பேர் உடனடியாக மரணத்தைத் தழுவியிருக்கக் கூடும் என்பது சில தன்னார்வ அமைப்புகளின் கருத்து.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) என்கிற அரசு ஆய்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, அந்த முதல் நாள் இரவில் மட்டும் யூனியன் கார்பைட் தொழிற்சாலையைச் சுற்றிலும் வசிக்கும் ஏறத்தாழ 5.20 லட்சம் பேர்களின் ரத்தக்குழாய்களில் விஷவாயு நச்சு கலந்து அவர்களது அனைத்து உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:
Post a Comment