Saturday, April 18, 2015

ஆன் - லைன் முன்பதிவு கட்டணம் உயர்வு:சத்தமின்றி அமல்படுத்திய ஐ.ஆர்.சி.டி.சி.,

புதுடில்லி: ஐ.ஆர்.சி.டி.சி., வலைதளத்தில், டிக்கெட் முன்பதிவுக்கான கட்டணம் சத்தமின்றி இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பயணிகள், ஐ.ஆர்.சி.டி.சி., வலைதளத்தில் தான் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். கடந்த 1ம் தேதி முதல், புதிய முன்பதிவு கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. படுக்கை வசதிக்கான டிக்கெட் முன்பதிவு கட்டணம், 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும், 'ஏசி' வசதி கொண்ட டிக்கெட்டுக்கான முன்பதிவு கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 'ஏசி' பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளிடம், 14 சதவீத சேவை வரி வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சி.பி.ஆர்.ஓ., சந்தீப் தத்தா கூறியதாவது:

ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட, உறுதியான டிக்கெட்டுகளுக்கு உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படாததால், ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரயில்வே வாரியத்தின் ஒப்புதலை பெற்ற பின் தான், சேவை கட்டணம் இரு மடங்காக உயர்த்தப் பட்டுள்ளது. சேவை கட்டணம் உயர்த்தப்பட்ட முதல் நாளில், ஏறக்குறைய இரண்டு கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024