நீட்' தேர்வில் விலக்கு பெற 24ல் டில்லி பயணம்: விஜயபாஸ்கர்
சென்னை: ''தமிழக மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்க அளிக்கக் கோரி, மார்ச், 24ல், மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளோம்,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - கோவி செழியன்: 'நீட்' நுழைவுத் தேர்வு, மருத்துவ மாணவர்களுக்கு மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு, மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என, முதன் முதலில், ஸ்டாலின் வலியுறுத்தினார்.அமைச்சர் விஜய பாஸ்கர்: ஜெ., அரசு, தொடர்ந்து, நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. தமிழகத்திற்கு சாதகமான முடிவு எடுக்க வேண்டும் என, பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தினார். அதன்பின், டில்லி சென்று, மத்திய சுகாதார அமைச்சர், சட்ட அமைச்சர், கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினோம்.
தமிழகத்தில், 3,700 மாணவர்கள் மட்டும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் தேர்வு எழுதுகின்றனர். மாநில பாடத்திட்டத்தின் கீழ், 3.90 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இவர்களால், அவர்களுடன் போட்டி போட முடியாது. எனவே, நீட் தேர்வில் இருந்து, தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.மீண்டும், 24ம் தேதி டில்லி சென்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்துப் பேச உள்ளோம். அரசு தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment