Wednesday, March 22, 2017

மதிப்பெண் சான்றிதழில் தமிழில் மாணவர் பெயர்

மதிப்பெண் சான்றிபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல், மாணவர்கள் பெயர் தமிழில் இடம் பெற உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில், பாடப்பிரிவு களின் பெயர்கள், தமிழ், ஆங்கில மொழிகளில் இடம் பெறும். மாணவர்களின் பெயர், ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.இதனால், மாணவர்கள் உயர் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் செல்லும் நிலையில், பெயர் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, தமிழில் பெயர் இடம்பெற வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி, பொது தேர்வு மதிப்பெண் பட்டியலில், இந்த ஆண்டு முதல் மாணவரின் பெயர் மற்றும் இனிஷியல், துாய தமிழில் இடம் பெற உள்ளது. அதேபோல், பள்ளியின் பெயரும், தமிழில் இடம் பெற உள்ளது.

இதுதொடர்பாக, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அனுப்பிய சுற்றறிக்கையில், 'மார்ச், 31க்குள், அனைத்து மாணவர்களின் பெயர்களும், தமிழ் இனிஷியலுடன், தேர்வுத் துறைக்கு பட்டியலாக அனுப்ப வேண்டும்' என்றார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...