Thursday, March 16, 2017

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை: தேர்வுத்துறை உத்தரவு

மதுரை, 'பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் இந்தாண்டு ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டுமே விடை நிரப்ப வேண்டும்' என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.இத்தேர்வு நாளை (மார்ச் 17) நடக்கிறது. 150 மதிப்பெண்கள் வினாக்களில், 75 ஒரு மதிப்பெண் வினாக்கள் 'அப்ஜெக்டிவ்' வகையாக கேட்கப்படும். இதற்கான விடைகள், தேர்வு அறையில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டில் நிரப்ப வேண்டும். கடந்தாண்டு புளு அல்லது கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாக்களால் மாணவர்கள் விடை நிரப்பலாம் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், இந்தாண்டு கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டும் தான் நிரப்ப வேண்டும் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'ஆன்சர் கீ' வெளியிடப்படுமா: பொது தேர்வுக்கு பின், மாணவர் நலன் கருதி அனைத்து தேர்வு வினாக்களுக்கும், 'ஆன்சர் கீ' விவரம், ஆன்லைனில் தேர்வுத்துறையால் வெளியிடப்படும். ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு மட்டும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் மறுமதிப்பீட்டின் போது விடைத்தாள் புகைப்பட நகல் கேட்டு விண்ணப்பித்தால் 'தியரி' பகுதிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
75 மதிப்பெண் பகுதியான 'ஓ.எம்.ஆர்., ஷீட்' நகல் வழங்குவதில்லை. எனவே, இந்தாண்டு முதல் 'ஆன்சர் கீ' வெளியிட்டு, ஓ.எம்.ஆர்., ஷீட் புகைப்பட நகல் வழங்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024