Wednesday, March 22, 2017

செல்லாத நோட்டு: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி: 'செல்லாத ரூபாய் நோட்டு களை 'டிபாசிட்' செய்ய, என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அவகாசம் அளித்துள்ளபோது, இந்தியர்களுக்கு ஏன், கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படவில்லை' என, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, 2016, நவ., 8ல் பிரதமர் மோடி வெளியிட்டார். அப்போது, 2016, டிச., 30க்குள், செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றிக் கொள்ளாதவர்கள், 2017, மார்ச், 31 வரை மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என, அறிவித்தார்.ஆனால், 2016, டிச., 30க்கு பின், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றவோ, வங்கிகளில் டிபாசிட் செய்யவோ முடியாது என, பின்னர் அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், 2017, மார்ச், 31 வரை, செல்லாத ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி கிளைகளில் மாற்றலாம் என, அறிவிக்கப்பட்டது.இவ்வாறு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளபோது, செல்லாத ரூபாய் நோட்டு வைத்துள்ள, இந்தியர்களுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கவில்லை. அவ்வாறு வாய்ப்பு அளிக்க சட்டப்படி சாத்தியமிருந்தும், ஏன் அளிக்கவில்லை என்பது குறித்து, ஏப்., 11க்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

 இவ்வாறு செல்லாத ரூபாய் நோட்டு வைத்துள்ளவர்கள், தகுந்த காரணங்களுடன், அதை மாற்றிக் கொள்ள மற்றொரு வாய்ப்பு அளிக்கப் படுமா என்பது குறித்தும் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.

அதிக மதிப்புடைய நோட்டுகள் குவிவதை தடுக்கும் நோக்கில், இனி, 500 ரூபாய் மற்றும் அதற்கு குறைவான மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை பதிப்பித்து, வினியோகம் செய்வதில், மத்திய அரசு கவனம் செலுத்தும்.
சக்திகாந்த தாஸ், பொருளாதார விவகாரங்கள் துறை செயலர்

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025