அமேசான் ப்ரைம் வீடியோவுடன் கூட்டு சேர்கிறது வோடபோன்!
அமேசான் ப்ரைம் வீடியோ சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவில் அறிமுகமானது. பல்வேறு பாலிவுட், ஹாலிவுட், டி.வி சீரியல்களை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் அமேசான் ப்ரைம் அறிமுகமானதால், இந்தியாவில் அதற்கு வரவேற்பு இருந்தது. இந்நிலையில் வோடபோன் இந்தியா நிறுவனம், அமேசான் ப்ரைமுடன் பார்ட்னர்ஷிப் போட்டுள்ளது.
இதன் மூலம், வோடபோன் வாடிக்கையாளர்கள் அமேசான் ப்ரைம் வீடியோக்களை ஆஃபர் விலையில் சப்ஸ்கிரைப் செய்து பயன்படுத்த முடியும். வோடபோன் வாடிக்கையாளர்கள் இந்த புதிய வசதியை வரும் மார்ச் 22-ம் தேதி முதல் அனுபவிக்க முடியும்.
இது குறித்து வோடபோன் இந்தியா நிறுவனம், 'வாடிக்கையாளர்கள் எப்படிப்பட்ட விஷயங்கள் மூலம் பொழுதுபோக்கு பெறுகிறார்கள் என்பது மாறிக் கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல், மாற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அமேசான் ப்ரைம் வீடியோ இதைத்தான் செய்கிறது. இதன்மூலம், எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தனித்துவமான மற்றும் சிறந்த சேவையை அளிக்க முனைகிறோம்' என்று கூறியுள்ளது.
No comments:
Post a Comment