'காவலர்கள் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைக்க வேண்டும்' - காவல்துறை தலைமையகம் உத்தரவு
அனைத்து காவலர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணியில் சேரும் காவலர்களுக்கு அடையாள அட்டை காவல்துறை தலைமையகத்தில் இருந்து வழங்கப்படுவதில்லை.
மாறாக காவலர்களுக்கு சீருடை, லத்தி, ஷூ உள்ளிட்டவைகளை வழங்கும் தனியார் நிறுவனம் தான் அடையாள அட்டையையும் வழங்கி வருகிறது. இதனால் எளிதாக போலியாக அடையாள தயார் செய்யும் வாய்ப்புகள் இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் காவலர்கள் போல வேடமிட்டு பணம்பறிப்பு, மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் செயல்கள் நடைபெறுகின்றன.
இதனை தடுக்கவும், அடையாள அட்டையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் அனைத்து காவலர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
போலியாக அடையாள அட்டை தயார் செய்து காவலர்கள் போல் உலவுபவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தில் ஆதார் எண் இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment