ஏழை நோயாளிகளை கவனிக்காமல் தனியார் மருத்துவமனையில் வேலை செய்யும் அரசு டாக்டர்கள்:கட்டுப்படுத்த வருகிறது பயோமெட்ரிக் கருவி
அரசு டாக்டர்கள் 10 சதவீதம் பேர் பணி நேரத்திலேயே தனியார் மருத்துவமனைக்கு சென்று பணியாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயோமெட்ரிக் கருவியை கட்டாயம் அமைக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பயோமெட்ரிக் கருவி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 31 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், தாலுகா அல்லாத மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் சுமார் 18 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். ஏழை நோயாளிகளுக்கு சேவை யாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் பணியாற்றி னாலும், பெயரளவுக்கு வந்து வருகையை பதிவு செய்து விட்டு, தனியார் மருத்துவமனை களில் வேலை செய்பவர்களும் இருக்கின்றனர். இத்தகைய டாக்டர்கள் அரசு மருத்துவ மனையைவிட தனியார் மருத்துவ மனையில்தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, அரசு டாக்டர் களை கண்காணிக்க முதல் கட்டமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் கருவி அமைக்கப் பட்டது. படிப்படியாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இக்கருவி அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்தது. அரசு டாக்டர்கள் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் கண்டிப்பாக இதில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கு அரசு டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுகாதாரத் துறை கட்டாயமாக்கியதால், சில மாதங்கள் மட்டுமே இதில் டாக்டர்கள் பதிவு செய்தனர். அதன் பின் யாரும் பதிவு செய்யாததால், மீண்டும் வருகைப் பதிவேடு முறை அமலுக்கு வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் பயோமெட்ரிக் கருவியை கட்டாயம் அமைக்கு மாறு நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதன்படி பயோமெட்ரிக் கருவி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுதொடர்பாக தமிழக மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினருமான டாக்டர் ஆர்விஎஸ்.சுரேந்திரன் கூறியதாவது:
அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனையில் வேலை செய்யக்கூடாது. அரசு மருத்துவ மனைகளில் தங்களது பணி நேரத்தை முடித்துவிட்டு, பிறகு தனியார் மருத்துவமனைகள் அல்லது கிளினிக்குகளில் மருத்துவ ஆலோசகராக பணி யாற்றலாம். அதேபோல தங்கள் பெயரில் சொந்தமாக மருத்துவ மனை, கிளினிக் வைக்கக்கூடாது. ஆனால், பெரும்பாலான டாக்டர்கள் தங்களது மனைவி அல்லது வேறு யாராவது பெயரில் மருத்துவமனை, கிளினிக் நடத்துகின்றனர்.
அரசு டாக்டர்களில் சுமார் 10 சதவீதம் பேர் தங்களது பணி நேரத்திலேயே தனியார் மருத்துவமனைக்கு சென்று பணியாற்றுவதாக தகவல்கள் வருகின்றன. இத்தகைய அரசு டாக்டர்கள் மீது ஏற்கெனவே பலமுறை நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் கே.செந்திலிடம் கேட்டபோது, ‘‘நீதிமன்ற உத்தரவுப் படி அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தும் பணி நடந்துவருகிறது. பயோ மெட்ரிக் கருவி இருந்தாலும், வருகைப் பதிவேட்டையும் நடைமுறையில் வைக்க வேண்டும்’’ என்றார்.
சிசிடிவியும் வருகிறது
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஒருசில மாவட்ட மருத்துவமனைகளில் மட்டுமே கண்காணிப்பு கேமராக் கள் உள்ளன. குழந்தைகள் திருட்டை தடுக்க பிரசவ வார்டு களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இவற்றில் பிரசவ வார்டுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமே பயன் பாட்டில் உள்ளன.
மற்ற இடங்களில் உள்ள கேமராக்கள் செயல்படுவதில்லை. இதனால் டாக்டர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல பிரச்சினை களில் உண்மையைக் கண்டறிய முடிவதில்லை. இதனால் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் கண்காணிப்பு கேம ராவையும் பொருத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment