Saturday, March 18, 2017

வாடிக்கையாளர்களை அதிரவைக்கும் பிஎஸ்என்எல்-ன் அதிரடிச் சலுகை!


ஜியோவை சமாளிக்க, ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை வழங்கிவருகின்றன. தற்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, 399 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், தினமும் 2GB, 3G டேட்டா வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆஃபர் 90 நாள்களுக்குதான் வழங்கப்படும் என்றும் பிஎஸ்என்எல் கூறியுள்ளது.



அதேபோல இந்த ஆஃபரில், அன்லிமிட்டட் ஆன் நெட் கால்ஸ்களும் வழங்கப்படும் என்றும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. ஸ்பெஷல் டேரிஃபின் கீழ் இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், பிற நெட்வொர்க்களுக்கு இலவசமாக 25 நிமிடங்களும் வழங்கப்பட்டுள்ளது. 25 நிமிடத்துக்குப் பிறகு, ஒரு நிமிடத்துக்கு 25 பைசா பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024