Wednesday, March 22, 2017


ஜாமீன் வழக்குகளில் கருவேல மரங்களை வெட்ட வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் தவிக்கப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுரை
DINAMANI

வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும் போது, கருவேல மரங்களை வெட்ட வேண்டும், மான்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என, கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த ஞானம் என்பவர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.தேவதாஸ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், மனுதாரரை கருவேல மரங்களை வெட்டும்படி நிபந்தனை விதிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து, வழக்கத்தில் இல்லாத வகையில் கருவேல மரங்களை வெட்ட சொல்வது, மிருகங்களுக்கான குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் வழக்கில் தண்டிக்கப்படும் வரை சம்பந்தப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவர் தான். விசாரணைக்கு முன் அவர்களுக்கு தண்டனை வழங்குவது, மனித உரிமைக்கு எதிரானது.



மேலும் நீதிமன்றங்கள் சட்டத்துக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். அதே போன்று, நீதிபரிபாலனத்தின் போது, கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இது போன்ற நிபந்தனைகள், குற்றவாளிகள் குற்றம் செய்து விட்டு, கருவேல மரங்களை வெட்டுவதாகக் கூறி ஜாமீனில் விடுதலையாகக் கூடிய எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2025