Sunday, December 23, 2018

பொங்கல் சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடக்கம்; அதிக கட்டணம் வசூலிக்கும் சுவிதா ரயில்களில் மந்தம்

Published : 23 Dec 2018 07:03 IST




பொங்கல் மற்றும் புத்தாண்டையொட்டி அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. ஆனால், அதிக கட்டணம் வசூலிக்கும் சுவிதா சிறப்பு ரயில்களில் பயணிகள் முன்பதிவு செய்ய தயக்கம் காட்டினர். சில சிறப்பு ரயில்களில் நேற்று மாலை வரையில் 130 முதல் 700 இடங்கள் வரையில் காலியாகவே இருந்தன.

ஆங்கில புத்தாண்டு மற்றும்பொங்கல் பண்டிகையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, திருநெல்வேலி, செங்கோட்டை மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில், எர்ணாகுளம் மற்றும் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல், திருநெல்வேலி, நாகர்கோவில் இருந்து சென்னைக்கு என மொத்தம் 15 சிறப்பு ரயில்கள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 150-க்கும் மேற்பட்ட சர்வீஸ்களாக இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓரளவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி, சில மணிநேரங்களில் முடிந்தது. ஆனால், பல மடங்கு கூடுதலா் கட்டணம் வசூலிக்கும் சுவிதா சிறப்பு ரயில்களில் முன்பதிவு மந்தமாக இருந்தது.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது,‘‘புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 60 முதல் 70 சதவீத இடங்கள்நிரம்பிவிட்டன. ஒரு சில தடங்களில் உள்ள சுவிதா சிறப்பு ரயில்களில் 130 முதல் 700 இடங்கள்வரையில் காலியாக இருக்கின்றன. இந்த காலி இடங்களும் இன்றுஅல்லது நாளைக்குள் முடிந்துவிடும். கூடுதல் தேவை ஏற்படும்போது 2-வது கட்ட சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும்’’ என்றார்.

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...