Sunday, December 23, 2018

பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு மாநிலம் முழுவதும் ஒரே தண்டனை முறை: சென்னையில் 26-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் இறுதி முடிவு

Published : 23 Dec 2018 08:04 IST

சென்னை



கோப்புப் படம்

பிளாஸ்டிக் தடையை மீறுவோ ருக்கு மாநிலம் முழுவதும் ஒரே சீரான தண்டனையை நிர்ணயிப் பது தொடர்பாக அரசு ஆலோ சித்து வருவதாக தகவல் வெளி யாகியுள்ளது.

தமிழக அரசு ஏற்கெனவே அறி வித்தபடி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், வைத்திருக்கவும், உற்பத்தி செய்ய வும் விதிக்கப்பட்ட தடையானது, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

இந்த தடையை மீறுவோருக் கான தண்டனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மத்திய அரசு உருவாக்கியுள்ள, பிளாஸ்டிக் மேலாண்மை விதிகள் 2016-ஐ பின்பற்றி தமிழக அரசு ‘பிளாஸ்டிக் மேலாண்மை விதிகள் 2016’-ஐ வெளியிட்டுள்ளது. அதில் விதிகளை மீறுவோருக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில், பிளாஸ் டிக் மேலாண்மை தொடர்பாக உருவாக்கப்படும் துணை விதி களில் குறிப்பிட்டுள்ளவாறு தண் டனை விதிக்கலாம் என குறிப் பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் பிளாஸ்டிக் மீதான தடை அமலுக்கு வந்தது. அங்கு பிளாஸ்டிக் தடையை முதல் முறையாக மீறுவோருக்கு ரூ.5 ஆயிரம், 2-வது முறை ரூ.10 ஆயிரம், 3-வது முறை ரூ.25 ஆயிரம் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் முதல் முறை விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த தவறும்பட் சத்தில், அவர்கள் மீது நீதிமன் றத்தில் வழக்கு தொடரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்மாநிலத் திலுள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் ஆகியோரின் பரிந்துரைகளைப் பெற்று தண்டனை விவரங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை மாநக ராட்சி மற்றும் நகராட்சி அதிகாரி கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோ ரிடம் அரசு சார்பில் தண்டனை தொடர்பாக கருத்துகள் எதுவும் கோரப்படவில்லை என கூறப் படுகிறது.

தண்டனை விவரங்கள் தொடர் பாக நகர்ப்புற உள்ளாட்சி அதி காரிகள் கூறும்போது, “அந்தந்த உள்ளாட்சிகள் தனித்தனியாக தண்டனை விவரங்களை உருவாக் கினால் வேறுபாடுகள் வரும் என்பதால், மாநிலம் முழுமைக்கும் ஒரே சீரான தண்டனை விவரங்களை உருவாக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

31-ம் தேதிக்குள் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படலாம். ஒருவேளை அரசு அறிவிக்கா விட்டால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் பணிகளை ஜனவரி 1-ம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும்” என்றனர்.

சென்னையில் ஆலோசனை

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதி காரிகள் கூறும்போது, “பிளாஸ் டிக் தடையை முறையாக அமல்படுத்துவது, அதற்கான தண்டனை விவரங்களை முடிவு செய்வது தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் சென்னையில் 26-ம் தேதி நடைபெறுகிறது. அதில் முக்கிய துறைகளின் தலைமை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அதில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றனர்.

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...