Tuesday, December 17, 2019

கேன்சர்' வாழைப்பழ குடோன் திருப்பூர் அதிகாரிகள், 'சீல்'

Added : டிச 17, 2019 02:19





பல்லடம்:பல்லடம் அருகே, ரசாயன முறையில் வாழைக்காய்களை பழுக்க வைத்த, குடோனுக்கு அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாணிக்காபுரம் அருகே, வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான வாழைப்பழ குடோன் உள்ளது.இங்கு, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு, திடீரென நுழைந்தனர்.வாழைக் காய்களை விரைந்து பழுக்க வைப்பதற்காக, ரசாயனம் கலந்த நீரில் ஊற வைத்து கொண்டிருந்த ஊழியர்கள், அதிகாரிகளை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

ஒரு புறம் பச்சை பசேலென வாழைத்தார்கள் குவியல், குவியலாக கிடக்க, மறுபுறம் ரசாயன ஊறலில் நிறம் மாறிய வாழைக் காய்கள், பழுத்த பழங்களைப் போல காட்சியளித்தன. குடோனுக்கு சீல் வைத்த அதிகாரிகள், மற்ற பழ குடோன்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
டாக்டர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:வாழைக் காய்களை, காற்றுப் புகாத அறையில் வைத்தால், அதிகபட்சம், 10 மணி நேரத்தில் பழுத்து விடும். ஆனால், இவர்கள், 'எலிக்ஸிர்' என்ற ரசாயனத்தை நீரில் கலந்து, அதில் வாழைக்காய்களை ஊற வைத்து, விரைந்து பழுக்கச் செய்கின்றனர்.அதாவது, பழுத்த பழம் போல நிறத்தை மாற்றி, விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறான ரசாயன கலப்பு பழங்களைச் சாப்பிட்டால், 'கேன்சர்' பாதிக்கும் அபாயம் உள்ளது. பொதுமக்கள், உஷாராக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...